பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 75 கடிதம் எழுதியது தனக்குத் தெரியவே தெரியாதென்றும் சொல்லி, போலீசாரைப்பற்றி நாம் அவதூறாகப் பேசுகிறோம் என்று அவன் நம் மீது குதிரையேறப் பார்ப்பான். ஆகையால், நாம் அவனிடம் போவது உசிதமாகப்படவில்லை. பெண் அவனுடைய வசத்திலிருக்கையில், நாம் ஊரிலெல்லாம் அலைந்து தேடுவதும் வீண்வேலை. அதனால்தான் நான் போகிறேனென்று சொன்னேன். உங்களுக்கு இஷ்டமிருந்தால், நீங்களே போலீஸ் இன்ஸ்பெக்டருடைய ஜாகைக்குப்போய் அவனைக் கண்டு பேசிப் பாருங்கள் என்றார். அதைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் கட்டிலடங்கா மனவேதனையும் சகிக்கவொண்ணாத கலக்கமும் கலவரமும் அடைந்து தத்தளித்துத் தவித்தவளாய்த் தனது கைகளைப் பிசைந்துகொண்டு, ஐயோ! அந்த மோசக்காரர்கள் என் குழந்தையை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்களோ, என்ன செய்துவிட்டார்களோ தெரியவில்லையே! அந்த துஷ்டர்கள் ஏதாவது துன்மார்க்கமான செய்கைக்கு அவளை வற்புறுத்துவார்களோ என்னமோ தெரியவில்லையே! அப்படிப் பட்ட காரியம் ஏதாவது நடந்திருந்தால், அவள் தன்னுடைய பிராணனை விட்டுவிடுவாளே! ஐயோ! என் குழந்தை இந்நேரம் உயிரோடிருக்கிறதோ, அல்லது, இறந்து போய்விட்டதோ, என்ன விபரீதம் நடந்திருக்கிறதோ தெரியவில்லையே. அவள் இப்பேர்ப் பட்ட மகா அபாயகரமான நிலைமையில் இருக்கையில், அவளைத் தேடாமலும், விடுவிக்க முயலாமலும், நான் எப்படி என்னுடைய பங்களாவுக்குப் போவேன்? என் உடம்பு அங்கே எப்படி இருக்கை கொள்ளும்; இந்த இராப் பொழுதை நான் எப்படிக் கழிப்பேன்! என் கண்கள்தான் துாக்கத்தை அறியுமா? என் மனம் இதைச் சகித்திருக்குமோ? ஐயா! தங்களுடைய பொழுது வீணாய்ப் போவதைப்பற்றி நூறல்ல இருநூறு ரூபாய் வேண்டுமானாலும் தருகிறேன். அதுவுமன்றி, தாங்கள் பார்த்து 576ir விஷயத்தில் இரக்கம்கொண்டு ஜீவகாருண்யம் ஒன்றையே முக்கியமாகக் கருதி, என் பெண்ணைத் தேடுவதில் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று நிரம்பவும் பணிவாகக் கெஞ்சி வேண்டிக்கொண்டாள்.