பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 77 தெருவில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரது மாளிகையின் வாசலில் போய் நின்றது. உட்னே வக்கீல் கீழே இறங்கி, வாசற் குறட்டிலேறித் திண்ணையண்டை போக, அதன்மேல் படுத்திருந்த ஒரு போலீஸ் ஜெவான் திடுக்கிட்டெழுந்து நின்று, வந்திருப்பது யாரென்று உற்றுப் பார்த்து, “யாரைத் தேடுகிறீர் கள்?’ என்றான். உடனே வக்கீல், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயாவைப் பார்க்க வேண்டும். உள்ளே இருக்கிறார்களா?" என்று வினவினார். உடனே அந்த ஜெவான், “இன்ஸ்பெக்டர் ஐயா வீட்டில் இல்லை” என்றான். வக்கீல் : வீட்டுக்கு எப்போது வருவார்? ஜெவான் : அவர் எப்போது வருவாரென்பதை நான் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. வக்கீல் : அவரை இப்போது நான் எங்கே பார்க்கலாம்? ஜெவான் : நீங்கள் நேராகக் காஞ்சீபுரத்துக்குப் போனால் அவரைப் பார்க்கலாம். வக்கீல் : ஏது அவர் காஞ்சீபுரத்துக்குப் போனது? ஜெவான் : அந்த ஊரில்தான் அவருடைய சம்சாரத்தின் தாய் வீடு இருக்கிறது. அங்கே அந்த அம்மாளுக்கு உடம்பு அசெளக்கியமென்று நேற்று மத்தியானம் செய்தி வந்தது. அதற்காக அவர் நேற்று இரவில் புறப்பட்டுப் போனார். அவர் எத்தனை நாளைக்கு ரஜா எடுத்துக்கொண்டிருக்கிறாரோ, எப்போது வருவாரோ தெரியவில்லை. வக்கீல் : ஒகோ அப்படியா சங்கதி! ஆனால் இப்போது வீட்டில் அவர்களுடைய ஜனங்கள் யாருமில்லையோ? ஜெவான் : யாருமில்லை, அதோ நடைக்கதவு சாத்தி வெளியில் பூட்டப்பட்டிருக்கிறதைப் பாருங்கள். வக்கீல் : (சிறிது நேரம் யோசனை செய்து தயங்கி) சரி; அப்படியானால், என்ன செய்கிறது. அவர் வந்த பிறகுதான், நான் வந்து பார்க்கவேண்டும். ஏனப்பா, எனக்கு இன்னம் ஒரே