பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 79 முடியாது. சப் இன்ஸ்பெக்டர் இருந்தால்கூட அவருக்கும் அந்தத் தகவல் தெரிய ஏதுவில்லை. வக்கீல் : தபால் திருட்டுச் சம்பந்தமாய் இங்கே சிறை வைக்கப்பட்டிருந்த முதலியார் பையனிடம் பேசிவிட்டுப் போனவர் மறுபடியும் இங்கே வரவில்லையா? ஜெவான் : வரவில்லை. வக்கீல் : நேற்று அவர் இங்கே வந்தபோது அவர் மாத்திரமா வந்திருந்தார்? அல்லது, அவரோடுகூட யாராவது ஜெவான்கள் வந்திருந்தார்களா? ஜெவான் : யாரோ ஜெவான்களும் வந்திருந்த மாதிரிதான் இருக்கிறது. வக்கீல் : அவர்களுள் அம்மைப் புள்ளிகள் விழுந்த முகத்தோடும், சிவப்புக்கல் கடுக்கன் போட்டுக்கொண்டும் யாராவது ஒரு ஜெவான் இருந்தானோ? ஜெவான் : (சிறிது யோசித்து) ஆம், அவனுடைய பெயர் கோவிந்தசாமி. அவன் இன்ஸ்பெக்டருடன் கூடவே எப்போதும் இருந்து அவருக்கு ரைட்டர் வேலைசெய்யும் ஜெவான். அவனும் நேற்று வந்த மாதிரிதான் இருக்கிறது. வக்கீல் : அவனுடைய வீடு எங்கே இருக்கிறதென்பது உனக்குத் தெரியுமா? ஜெவான் : அவனுக்கு வீடுமில்லை. ஒன்றுமில்லை. அவன் சோற்றுக்கடையில் சாப்பிட்டுவிட்டு எப்போதும் இன்ஸ் பெக்டருடைய வீட்டிலேயே இருப்பான். வக்கீல் : நாங்கள் பல ஸ்டேஷன்களிலும் போய் பெரிய இன்ஸ்பெக்டர் இருக்கிறாராவென்று விசாரித்தோம். அவர் எங்கும் இல்லையென்றே சொல்லிவிட்டார்கள். அவர் ஒருகால் எங்கேயோவது ஊருக்குப் போயிருக்கிறாரோ என்ற சந்தேகம். அவரோடு எப்போதும் இருக்கும் ஜெவானாகிய கோவிந்த சாமியைக் கண்டால், அவர் எங்கே போயிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத்தேன்.