பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 செளந்தர கோகிலம் ஜெவான் : பெரிய இன்ஸ்பெக்டர் வெளியூருக்குப் போயிருந்தால் அவனும் கூடவேதான் போயிருப்பான். அவன் கூட இல்லாவிட்டால், அவருக்கு ஒரு நிமிஷம்கூட எந்தக் காரியமும் ஆகாது என்றான். - வக்கீல், "ஒகோ அப்படியா சங்கதி: இருக்கட்டும். நான் போய் வேறே எங்கேயாவது விசாரித்துப் பார்க்கிறேன்” என்று கூறியவண்ணம் அவ்விடத்தைவிட்டு வெளியில் வந்து அவ்விடத்தில் தாம் தெரிந்து கொண்ட தகவல்களையெல்லாம் பூஞ்சோலையம்மாளிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த ஏக்கமும் கலக்கமும் கொண்டு சகிக்கவொண்ணாத கவலைகாட்டிய முகத்தோடு, "நாம் இப்போது என்ன செய்கிறது!" என்றாள். வக்கீல், “இன்ஸ்பெக்டர் ஊருக்குப் போயிருப்பதாக, அவருடைய வீட்டு வாசலிலிருந்த ஜெவான் சொன்னது நிஜமாயிருக்குமென்று நான் நினைக்கவில்லை; தம்மை யாராவது தேடிக்கொண்டு வந்தால், அவர்களைப் பார்க்கக் கூடாதென்று நினைத்து அவர் வீட்டுக்குள்ளே இருந்தாலும் இருக்கலாம். உங்களுக்குக் கடிதம் கொண்டு வந்து பெண்ணை அழைத்து வந்தவன் இன்ஸ்பெக்டருடைய ஜெவான் கோவிந்தசாமி என்ற முக்கியமான விஷயத்தை நாம் தெரிந்துகொண்டோம். இப்போது இரவு வேளை ஆய்விட்டது. நாம் எங்கேயும் போய்த் தேடமுடியாது; வேறு எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவும் முடியாது. நீங்கள் உங்கள் ஜாகைக்குப் போய்ப் பொழுது விடிகிற வரையில் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருங்கள். நாளைய தினம் காலையில் நான் அங்கே வந்து சேருகிறேன். அதற்குள் அநேகமாய்ப் பெண் திரும்பி உங்களிடம் வந்துவிடலாம். வராவிடில் நாம் அதற்குமேல் யோசனை செய்து மேல் நடவடிக்கை நடத்தலாம். என் வீடு இங்கே பக்கத்தில்தான் இருக்கிறது. நான் இப்படியே போகிறேன்” என்றார். அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாளுக்குத் தன் கண்களைக் கட்டி நடுகாட்டில் விட்டதுபோல இருந்தது. அந்த அம்மாளது