பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ! மழை காணா இளம்பயிரோ! 83 நிவர்த்திசெய்துகொள்ள வேண்டுமென்று அவர் தீர்மானித்துக் கொண்டார். ஆயினும் தமக்கு உதவியாக இன்னொரு மனிதனையும் தம்முடன் கூட அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்ற யோசனை தோன்றியது. ஆகவே, அவர் புஷ்பாவதியம்மாளை உள்ளே அனுப்பிவிட்டு, அந்தப் பங்களாவில் வேலைக்காரன் குடி இருப்பதற்காக அமைக்கப் பட்டிருந்த கட்டிடங்களை நோக்கி நடந்து அங்கு ஒரு தனியான கட்டிடத்தில் இருந்த வண்டிக்கார மினியனைக் கண்டார். இந்தக் கதையின் தொடக்கத்தில், கடற்கரையில் விபத்து நேர்ந்த காலத்தில், கோகிலாம்பாள், செளந்தரவல்லி ஆகிய இருவரும் ஏறிவந்த ஸ்ாரட்டை ஒட்டிய வண்டிக்காரனது பெயர் மினியனென்பது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த விபத்தில் அவனது கால்கள் சுளுக்கிக்கொண்டதும், அவனுக்கு நமது சுந்தரமூர்த்தி முதலியார் பிராந்திப் புட்டி கொடுத்து, அவனிடம் சம்பாவித்த விவரங்களும் முன்னரே கூறப் பட்டிருக்கின்றன. அதன் பிறகு மினியனது கால்கள் சரியான நிலைமைக்கு வரப் பல நாட்கள் ஆயின. சுந்தரமூர்த்தி முதலியார் அந்தப் பங்களாவிற்கு வந்தபோதெல்லாம் மினியன் இருந்த இடத்திற்குப்போய் அவனைப் பார்த்து அவனுக்குப் பல மருந்துகளும் பிராந்தி புட்டிகளும் கொடுத்து அவனது மாறாத பிரியத்தையும் நன்றி விசுவாசத்தையும் அடைந்திருந்தார். அதுவுமன்றி, தனது எஜமானியம்மாளது இளைய குமாரியான செளந்தரவல்லியம்மாளை சுந்தரமூர்த்தி முதலியாருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்ற செய்தியையும் அவன் எப்படியோ தெரிந்து கொண்டிருந்தான். ஆதலால், அவரும் தனக்கு ஒரு வகையில் எஜமானர் என்ற எண்ணம் அப்போது முதலே அவனது மனத்தில் உண்டாகிவிட்டது. ஆகவே, அவன் அவரிடத்தில் அளவற்ற பயபக்தி விசுவாசம் வைத்து அவரை ஒரு தெய்வம்போலவே மதித்து அவர் காலாலிடும் வேலையைத் தலையால் செய்யத்தக்க நிலைமையில் இருந்தான். மேலே குறிக்கப்பட்ட தினத்தன்று காலையில் இளைய ஜெமீந்தார் தனது இருப்பிடத்திற்கு வந்ததைக் கண்ட மினியன்