பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 செளந்தர கோகிலம் ஆநந்த பரவசமடைந்து துள்ளியெழுந்து, 'சாமீ! வாங்க சாமி! தாசனுங்க நமஸ்காரமுங்க” என்று கூறி மிகுந்த பணிவும் வணக்கமும் தோற்றுவித்து அவருக்கு ஒரு கும்பிடு போட்டான். உடனே இளைய ஜெமீந்தார், 'மினியா! ஏதாவது அலுவலாயிருக்கிறாயா? அரைமணி நேரம் நீ என்னோடுகூட வரமுடியுமா?’ என்றார். மினியன், 'வாறெனுங்க எசமான். நான் சொம்மாத்தான் குந்திக்கினு இருந்தேனுங்க. இப்பவே வரணுமா?’ என்று நிரம்பவும் துடியாக மறுமொழி கூறினான். உடனே இளைய ஜெமீந்தார், 'இப்பொழுதேதான் போகவேண்டும். உள்ளே போய் உன்னுடைய காசாரி உடுப்புகளைப் போட்டுக்கொண்டு சீக்கிரம் வா” என்றார். அவன் மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் கொண்டு விசையாக உள்ளே சென்று தனது உடுப்புகளை அணிந்துகொண்டு ஐந்து நிமிஷத்தில் வந்து சேர்ந்தான். சுந்தரமூர்த்தி முதலியார் அவனைத் தம்மோடு கூட அழைத்துக் கொண்டு போய்த் தமது மோட்டார் வண்டி இருந்த இடத்தை அடைந்து, மினியா! நீ வண்டியில் ஏறி உள் பக்கத்தில் உட்கார்ந்துகொள்” என்றார். அவன் சிறிது தயங்கி, "எசமான் ஒக்கார்ற எடத்துலெயா?” என்றார். உடனே சுந்தரமூர்த்தி முதலியார், 'இல்லையடா கீழே கால்களை வைக்கும் இடத்தில் உட்கார்ந்துகொள்” என்றார். மினியன் அப்படியே உட்கார்ந்து கொள்ள, இளைய ஜெமீந்தார் வண்டியின் கதவைத் தாளிட்டு விட்டு முன் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து வண்டியை ஒட்டிக் கொண்டு பங்களாவிற்கு வெளியில் சென்று, அதையடுத்தாற் போல இருந்த ரஸ்தாவில் வண்டியை மெதுவாக விடுத்துக் கொண்டு சிறிது தூரம் போவதும் பிறகு திரும்பி வருவதுமாய் இருக்க, அரை நாழிகை காலம் கழிந்தது. கோகிலாம்பாள், கோவிந்தசாமி, முருகேசன் ஆகிய மூவரும் இருந்த பெட்டி வண்டி பங்களாவை விட்டு வெளிப்பட்டு, அவர்கள் இருந்ததற்கு எதிர்ப் பக்கத்தில் அதே ரஸ்தாவில் செல்ல ஆரம்பித்தது. அந்தப் பெட்டி வண்டியை அரை பர்லாங்கு தூரம் முன்னால் போகவிட்டு நமது சுந்தரமூர்த்தி முதலியார் அதைத்தொடர்ந்து தமது மோட்டாரை மெதுவாக விடுத்துக்