பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காண இளம்பயிரோ! 85 கொண்டே செல்லலானார். கோகிலாம்பாள் பெட்டி வண்டியின் உட்பக்கத்தில் இருந்தமையால், பின்புறத்தில் சுந்தரமூர்த்தி முதலியார் மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அவள் சிறிதும் நினைக்கவே இல்லை. கோவிந்தசாமியும், முருகேசனும் வண்டியின் முன் பக்கத்திலிருந்து ஒட்டிக்கொண்டு போயினர். ஆதலால், அவர்கள் பின்புறத்தில் யார் வந்தார்களென்பதைப் பார்க்கவே இல்லை. அவர்கள் பார்த்திருந்தாலும், நமது சுந்தரமூர்த்தி முதலியாருடைய அடையாளம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அந்த நிலைமையில் வண்டிகள் முன்னும் பின்னுமாய் ஆனை கவுணியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தன. இளைய ஜெமீந்தார் என்ன கருத்தோடு தன்னை மோட்டார் வண்டியில் உட்காரவைத்துக் கொண்டு போகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் மினியனது மனத்தில் பிரமாதமாக எழுந்து வதைத்தது. ஆனாலும், அவன் அவரிடம் அதைப்பற்றிக் கேட்காமல் தன் மனத்தை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். சுந்தரமூர்த்தி முதலியார் பெட்டி வண்டியைப் பின்பற்றித் தமது வண்டியை விடுத்த வண்ணம் மினியனோடு சம்பாவிக்கத் தொடங்கி, "என்ன மினியா?” என்றார். அவன், "என்னாங்க சாமீ" என்றான். சுந்தரமூர்த்தி முதலியார் : கலியான சங்கதியெல்லாம் உன் காதில் விழுந்ததா? மினியன் : (மிகுந்த கலக்கமும் விசனமும் தளர்ச்சியும் அடைந்து) எல்லாச் சங்கதியும் காதுலே உளுந்துச்சிங்க. என்னமோ பொல்லாத வேளையிங்க மூத்த கொயந்தே நல்ல தங்கமான மனசுள்ளதுங்க. அதுக்கு வந்து வாச்சவரும் அதுக்கு மேலே நூறு பங்கு நல்லவருன்னு சொல்லிக்கிறாங்க.. ஆனா அவுங்க கொஞ்சம் ஏளெப்பட்டவங்க இருந்தாலும் பரவாயில்லிங்க. அப்படிப்பட்ட மணிசருக்கு என்னென்னவோ இல்லாத பொல்லாத தொந்தரவெல்லாம் வந்திருக்குதுங்க. கந்தரமூர்த்தி முதலியார் : அவர் பார்வைக்கு நல்ல குணம் உடையவராகத்தான் இருக்கிறார். ஆனால், போலீசாரிடம்