பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செளந்தர கோகிலம் விசாரித்ததில், அவர் உண்மையில் அந்தத் திருட்டில் சேர்ந்த்வர் என்றும், அவர் இரண்டு வருஷ காலத்திற்காவது தண்டனை அடைவார் என்றும் சொல்லுகிறார்கள். அவர் சுத்த ஏழையாம் ; வெகு சீக்கிரத்தில் சுலபமான வழியில் பணக்காரர் ஆகி, பெண் வீட்டாருக்குச் சமமானவர்கள் ஆகிவிட வேண்டுமென்ற எண்ணத்தினால் அவர் அப்படிச் செய்ததாகவும் சொல்லு கிறார்கள். அதுவுமன்றி, நேற்று ஒரு சாயப்பு வந்து சொன்ன சங்கதிகளைக் கேட்டாயா? மினியன் : ஐயோ! அது சுத்த அசிங்கமுங்க. அது நெசமாயிருக்குமா எசமானே! சுந்தரமூர்த்தி முதலியார் : என்னவோ, அப்பா இதை எல்லாம் நாம் எப்படி நிச்சயிக்கிறது. அதைக் கேட்டவர்கள் எல்லோரும் அப்படியும் உலகத்தில் நடக்குமா என்றுதான் ஒருவரைப்போல எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். விஷயம் நிஜமோ பொய்யோ. அத்தனை ஜனங்களுக்குமுன் இம்மாதிரி யான அவமானம் ஏற்பட்ட பிறகு, அந்த மனிதர்களுடைய சம்பந்தத்தை இவர்கள் நாடினால், அதைப் பற்றி ஜனங்கள் எப்போதும் துரவித்துக்கொண்டேதான் இருப்பார்கள். மினியன் : ஆமாங்க சாமி! ஒலைவாயெ அடக்கினாலும் அடக்கலாம்; ஊரு வாயெ அடக்க முடியாதல்ல. இன்னமே இவங்க அந்தப் பொண்னே அந்த எடத்துலே கட்டிக் குடுக்கறது நல்லதில்லிங்க. சுந்தரமூர்த்தி முதலியார் : நீ அப்படிச் சொல்லுகிறாய். அந்தப் பெண்ணும் அதன் தாயாரும் இன்னமும் ஒரே பிடிவாத மாக இருக்கிறார்கள். அந்தக் கண்ணபிரான் முதலியார் தண்டனையடைந்தாலும், அவர் வந்த பிற்பாடுகூட அவரைத் தான் அந்தப் பெண் கட்டிக்கொள்ளப் போகிறதாம். மினியன் : அப்படியானால், எஜமானுக்கும் சின்னக் கொயந்தெக்கும் கண்ணாளம் எப்ப நடக்கமுங்க? சுந்தரமூர்த்தி முதலியார் : அதில் ஒர் இடைஞ்சல் இருக்கிறது. ஆதியிலிருந்தே எனக்குப் பெரிய பெண்ணின் மேல் தான் ஆசை அதைக் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று நாங்கள்