பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ 87 முதலில் கேட்டோம். அதற்கு முன்னாகவே, இவர்கள் அதைக் கண்ணபிரான் முதலியாருக்குக் கட்டிக்கொடுக்க முடிவு செய்து விட்டதாகவும், சின்னப் பெண்ணை எனக்குக் கட்டிக் கொடுப்பதாகவும் சொன்னார்கள். அதற்கு நாங்கள் இரண்டாம் பட்சமாக இணங்கினோம். இப்போது நிலைமை மாறிப்போய் விட்டது. மூத்தபெண் அந்தக் கண்ணபிரான் முதலியாரைக் கட்டிக்கொண்டால், ஊர் ஜனங்கள் இவர்களை ஜாதியிலிருந்து விலக்கி விடுவார்கள். நாங்கள் சின்னப் பெண்ணைக் கட்டிக் கொண்டால், எங்களுடைய கதியும் அதே மாதிரிதான் முடியும். ஆகையால், இவர்களுக்கு எங்களுடைய சம்பந்தம் வேண்டு மானால், இவர்கள் இனி அந்தக் கண்ணபிரான் முதலியாரை மறந்துவிடவேண்டும். அந்த மூத்த பெண்ணுக்கு வேறே புதிய மனிதன் ஒருவனை தேடிப் பிடிப்பதைவிட்டு, அதன் மேல் ஆசை வைத்துள்ளவனான எனக்கே அதைக் கட்டிக்கொடுத்து சின்னக் குழந்தையை வேறே யாருக்காவது கட்டிக்கொடுங்கள் என்று நாங்கள் சொன்னோம். இவர்கள் அதை ஒப்புக் கொள்ள வில்லை. மினியன் : அது தப்புதானுங்க. எசமான் கேக்கறபடியே இவுங்க அந்த மூத்த கொயந்தெயெ எசமானுக்கே கட்டிக் குடுக்கலாமுங்க. இன்னொரு தரம் கேட்டுப் பாருங்களேன். சாமீ! சுந்தரமூர்த்தி முதலியார் : நாங்கள் ஆயிரம் தடவை சொல்லிப் பார்த்துவிட்டோம். அந்த மூத்த பெண் கண்ணபிரான் முதலியார் பேரிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறது. வக்கீல் வைத்து வாதாடச் செய்து அவரைத் தப்ப வைத்து அழைத்து வந்து அவரையே கட்டிக்கொள்ள வேண்டுமென்று அந்தப்பெண் ஒரே பிடிவாதமாகப் பேசுகிறது. மூத்த பெண் தானேபோய் வக்கீல் வைக்கவோ, அல்லது, யாராவது தங்கள் சொந்தக்காரரைக் கொண்டு வக்கீல் வைக்கச் செய்யவோ எண்ணி இதோ நமக்கு முன்னால் ஒரு பெட்டி வண்டியில் தனியாய்ப் போகிறது பார். மினியன் : (நிமிர்ந்து முன்னால் பார்த்து) ஆமா சாமீ! நம்ப முருகேஸனல்ல வண்டி ஒட்டறான்! உள்ளற பொண்ணு மாத்திரமா இருக்குதுங்க?