பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செளந்தர கோகிலம் கந்தரமூர்த்தி முதலியார் : ஆம்; பெண் மாத்திரந்தான் இருக்கிறது. பெண் எங்கே போகிறதென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் நான் உன்னை அழைத்துக்கொண்டு வந்தேன். வேறே காரியம் ஒன்றுமில்லை. பெண் ஒருவேளை இவர்களுடைய சொந்தக்காரர் யாரிடமாவது போனால், அந்த வீட்டு அடையாளத்திலிருந்து அவர்கள் இன்னார் என்பதை நீ சொல்லக்கூடுமென்று நினைத்து உன்னை அழைத்துக்கொண்டு வந்தேன். மினியன் : என்ன அதிசயம் சாமி இது இது காலம் தனியா வங்களாவெ உட்டு வெளியே வந்தறியாத கொயந்தே இன்னக்கித் துணிஞ்சி போவுது பாருங்க சாe - என்றான். அவ்வளவோடு அவர்கள் தங்களது சம்பாஷணையை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது. அதுவுமன்றி இளைய ஜெமீந்தார் அவ்விடத்தில் தமது மோட்டார் வண்டியையும் நிறுத்திவிட்டு முன் பக்கத்தில் தமது கவனத்தைச் செலுத்தினார். அவ்விடத்தில் தான் கோகிலாம்பாளது பெட்டி வண்டி ரஸ்தாவின் தப்பான பக்கத்தில் விடப்பட்டதென்று போலீஸ் சேவகன் வண்டியை நிறுத்தும்படி செய்தான். அந்த ஜெவானுக்கும் வண்டியிலிருந்து கோவிந்தசாமிக்கும் நடந்த சம்பாஷணை சுந்தரமூர்த்தி முதலியாரின் செவிக்கு எட்டவில்லை. ஆயினும், வண்டிக்கார முருகேசனை அந்த ஜெவான் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு போனதையும் வண்டியில் இருந்த இன்னொரு மனிதன் அதை ஒட்டிக்கொண்டு மேலே சென்றதையும் உணர்ந்த இளைய ஜெமீந்தார் பெட்டி வண்டியைத் தொடர்ந்தே தமது மோட்டார் வண்டியை விடுத்துக்கொண்டு செல்லலானார். கோகிலாம்பாளது வண்டி தங்கசாலைத் தெருவைக் கடந்து அதற்கு அப்பால் சென்று பக்கத்தில் இருந்த செங்கான்கடை வீதியையடைந்து போலீஸ் இன்ஸ்பெக்டரது மாளிகையின் வாசலில்போய் நின்றது. உடனே கோவிந்தசாமியும் நமது பெண்ணரசியும் வண்டியை விட்டுக் கீழே இறங்கி உள்ளே சென்றார்கள். கோவிந்தசாமியின் கையில் ஒரு மூட்டை இருந்தது. அந்த மாளிகையின் வாசலில் தமது மோட்டார்