பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 89 வண்டியைக் கொணர்ந்து நிறுத்திய சுந்தரமூர்த்தி முதலியார் இன்ஸ்பெக்டரது மாளிகையின் வாசலில் நின்ற பாராக்காரர்கள் தம்மீது சந்தேகம் கொள்வார்களென்று எண்ணி, அவர்களை உற்றுப்பார்க்காமல் கீழே இறங்கி பக்கத்திலிருந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்த சில மனிதரண்டை போய் நயமாகப் பேச்சுக் கொடுத்து, பக்கத்திலிருந்த பெருத்த மாளிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளையினுடைய மாளிகை என்றும், அவருடைய மனைவி குழந்தைகள் முதலியோர் எவரும் அப்பொழுது வீட்டில் இல்லையென்றும், அவர் மாத்திரம் தனியாயிருந்து வருகிறாரென்றும், அவர் பொல்லாத துஷ்டர் என்றும், விபசார நாட்டமுள்ளவரென்றும் தெரிந்துகொண்டு, அவ்விடத்தைவிட்டு நடந்துவந்து தமது மோட்டார் வண்டியை அடைந்து கீழே பார்ப்பதுபோலே, போலீஸ் இன்ஸ்பெக்டரது மாளிகை வாசலைப் பார்த்தார். கோகிலாம்பாளுடன் மூட்டையை எடுத்துச் சென்ற மனிதன் மறுபடி திரும்பிவந்து, கோகிலாம்பாளது பெட்டிவண்டியண்டை நெருங்கி, குதிரையைப் பிடித்து நடத்தி ஒதுக்குப்புறமான ஒரிடத்திற்கு வண்டியைக் கொண்டுபோய்க் குதிரையை வண்டியினின்றும் விலக்கிவிட்டு சிறிது தூரத்திற்கப்பால் கொண்டுபோய்க்கட்டி அதற்குப் புல் போட்டபின் மறுபடியும் மாளிகைக்குப் போய் விட்டான். அதைக் கவனித்துக் கொண்டிருந்தவரான சுந்தரமூர்த்தி முதலியாரது மனத்தில் விபரீதமான பல எண்ணங்களும் சந்தேகங்களும் தோன்றின. அவரது மனம் பொங்கி எழுந்து தடிக்க தேகம் கட்டிலடங்காமல் பறந்தது. போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாதந்திரமான சூழ்ச்சி வலை விரித்து, அதற்குள் நமது மடமானை வீழ்த்தியிருக்கிறார் என்று சுந்தரமூர்த்தி முதலியார் சிறிதும் சந்தேகிக்கவே ஏதுவில்லை. ஆதலால், கோகிலாம்பாளது கற்பின் உறுதியைப்பற்றி அவர் உடனே சம்சயம் கொள்ள லானார். அவள் தன்னால் காதலிக்கப்படுபவனான கண்ண பிரானை விடுவிக்க வேண்டுமென்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டுக் கொள்வதற்காக வந்திருக்கிறாளென்றும், சொந்தக்காரர் ஏதோ அவசர நிமித்தம் கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்று