பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 செளந்தர கோகிலம் அவர்கள் புஷ்பாவதியிடம் கூறியது பொய்யான தகவல் என்றும், இன்ஸ்பெக்டர் கோகிலாம்பாளைக் கண்டு மோகித்து, ஒர் ஆளை அனுப்பி ஏதோ தந்திரம் செய்திருக்க வேண்டுமென்றும், தாம் இன்ஸ்பெக்டரது பிரியப்படி நடந்து அவரது தயவைச் சம்பாதித்து அவர் மூலமாய்க் கண்ணபிரானை விடுவித்துக் கொள்ள அவர்கள் உத்தேசிக்கிறார்கள் என்றும், அவர்கள் கொணர்ந்த மூட்டையில் அநேகமாய் பகடின பலகாரங்களே இருக்கவேண்டுமென்றும், அந்த ஆள் குதிரையை வண்டியில் இருந்து அவிழ்த்து அதற்குப் புல் போட்டதிலிருந்து, கோகிலாம்பாள் வெகு நேரம் வரையில் உள்ளே இருந்துவிட்டு வெளியில் வரப்போகிறாளென்றும், பரஸ்திரீ நாட்டம் உடையவரான இன்ஸ்பெக்டர் தனியாக இருக்கும் இடத்தில் கோகிலாம்பாள் வெகு நேரம் இருக்க உத்தேசிப்பதைக் கொண்டு, அவள் அவருடைய பிரியப்படி நடந்துகொள்ள சம்மதித்தே வந்திருக்கிறாளென்றும் சுந்தரமூர்த்தி முதலியார் தீர்மானித்துக்கொண்டார். உடனே அவரது தேகம் பதறியது; கைகால்களெல்லாம் துடிதுடித்தன. அந்த நிமிஷத்தில் கோகிலாம்பாளும், இன்ஸ்பெக்டரும் என்ன நிலைமையில் இருக்கிறார்களோ என்பதை அவர் தமது மனத்தால் நினைக்க நினைக்க, கட்டிலடங்காத மூர்க்கமான ஆவேசமும், ஆத்திரமும் எழுந்து அவரைத் தூண்டவாரம்பித்தன. அவரது இரத்தம் பொங்கிக் கொதித்துக் கொந்தளிக்க ஆரம்பித்தது. மூளை கலங்கியது. அறிவு தடுமாறியது. தேகம் கட்டிலடங்காமல் முறுக்கிக்கொள்கிறது. ஒரே உதையில் அந்த மாளிகையைத் தூளாக்கி, இன்ஸ்பெக்டரையும் கோகிலாம்பாளையும் சக்கை சக்கையாய்க் கிழித்தெறிந்து விடவேண்டுமென்ற சகிக்கவொண் ணாத பெருத்த ஆவேசம் தோன்றி அவரைத் தூண்டியது. அந்த நிலைமையில் தாம் என்ன செய்வதென்பதைப்பற்றி அவர் சிறிது நேரம் சிந்தனை செய்து பார்த்தார். உடனே இன்ஸ்பெக்டரது மாளிகைக்குள் நுழைந்து அவர்களைப் பார்த்து விடவேண்டு மென்ற துடிதுடிப்பும் அவரது மனத்தில் தோன்றியது. ஆனாலும், வெளியில் பாராக்காரர்கள் தம்மைப் பிடித்துக் கைது செய்துவிடுவார்கள் என்ற எண்ணம் அவரைத் தடுத்தது. தாம்