பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 93 கேட்பாளேயானால், நேராகப் புரசைப்பாக்கம் போகும் பாதையை அடைத்து செப்பனிடுகிறார்கள் என்றும், அதனால் வேறு தெருக்களின் வழியாய்ச் சுற்றிக் கொண்டு போவதாகவும் சொல்லிவிடு. தெரிகிறதா?” என்றார். மினியன் (சிறிது தயங்கி) "அப்பிடியே செய்யறேனுங்க. எசமான் அங்ங்னெ என்னாச்சும் அம்மாளுக்குத் தொந்தரவு பண்ணப் போlங்களோ என்னமோ என்றான். இளைய ஜெமீந்தார், "அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் தற்செயலாக வருகிறதுபோல, எதிர்த்திக்கிலிருந்து அங்கே வந்து அம்மாளிடம் பேசி, நிஜத்தைத் தந்திரமாக விசாரிக்கிறேன். அது தனியான இடம்; இங்கே ஜன நடமாட்டம் அதிகம். ஆகையால், அங்கே விசாரிப்பதுதான் நல்லது' என்றார். மினியன், “சரி, அதிருக்கட்டுங்க. அந்த ரஸ்தா மைலாப் பூருக்குப் போற ரஸ்தாங்கறது பின்னால தெரிஞ்சு பூட்டுதானா, அம்மாள் எம்மேல கோவிச்சுக்குவாங்க என்னை வேலெயிலே இருந்து நீக்கினாலும் நீக்கிடுவாங்களே சாமி!” என்றான். சுந்தரமூர்த்தி முதலியார், 'அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. அவர்கள் உன்னைத் தள்ளினால், அவர்கள் கொடுப்பதைவிட இரட்டிப்புச் சம்பளம் கொடுத்து உன்னை நான் வைத்துக்கொள்கிறேன். நீ பயப்புடாதே' என்றார். அதைக் கேட்ட மினியன் சந்தோஷமடைந்து, அவருடைய விருப்பத்தின்படி செய்வதாக ஒப்புக்கொண்டான். உடனே அவர் தமது மோட்டார் வண்டியை ஒட்டிக்கொண்டு பக்கத்திலிருந்த தெருவில் திரும்பி அவ்விடத்தில் மினியனை இறக்கிவிட, அவன் மறுபடி திரும்பி நடந்து இன்ஸ்பெக்டரது வாசலையடைந்தான். சுந்தரமூர்த்தி முதலியார் முடக்கில் ஒளிந்து நின்று, அவன் பெட்டி வண்டியண்டை போய் உட்கார்ந்து கொள்ளுகிறானா என்று பார்த்து நிச்சயப்படுத்திக் கொண்டு உடனே தமது மோட்டார் வண்டியை விசையாக ஒட்டிக்கொண்டு போய் விட்டார். கோட்டைக்குப் பக்கத்திலிருக்கும் தோப்பில் அவர் நிறைவேற்ற உத்தேசித்த காரியத்தை மினியனிடம் உள்ளபடி