பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-வது அதிகாரம் திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர்

  • ஆ லிஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளையின்

& சயன மாளிகைக்குள் போய் அகப்பட்டுக் s கொண்ட நமது உத்தம குண மங்கையான % கோகிலாம்பாள் அவ்விடத்திலிருந்து தப்பி 劉 வெளியில் வந்தாளா, அங்ங்னமாயின், தனது ஒ கற்பிற்குச் சிறிதும் இழுக்கின்றி அந்தக் " காமாதுரனிடத்திலிருந்து வர இயன்றதா என்ற வரலாற்றை அறிந்துகொள்ளுவதற்கு முன் நாம் அவசரமாக நமது சென்னை மாநகரத்தை விட்டுப் புறப்பட்டு மேற்குக் கடற் கரையை அடுத்துள்ள மலையாள தேசத்திற்குப் போய், அவ்விடத்திலிருந்தவர்களும், நமது கதையில் நெருங்கிய சம்பந்தமுடையவர்களுமான சில மனிதர்களைப் பார்த்துவிட்டு வருவது முக்கிய காரியம். ஆதலால், அதைநாம் உடனே கவனிப்போம். திருவாங்கூர் என்பது மலையாள தேசத்திலுள்ள ஒரு பெரிய சமஸ்தானமென்பதும், கேரள வம்சத்தைச் சேர்ந்த சுதேச அரசர் சமஸ்தானத்தை இப்போதும் ஆண்டு வருகிறார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள். நமது இங்கிலீஷ் அரசருக்குப் பதிலாக அவரிடம் சர்வ அதிகாரமும் பெற்ற கவர்னர் ஜெனரல் என்பவர் இராஜப் பிரதிநிதியாக இருந்து எப்படி நமது இந்தியாவை ஆளுகின்றாரோ, அதுபோலவே திருவாங்கூர் சமஸ்தானத்திலும் திவான் என்ற பெயருடன் ஒர் இராஜப்பிரதிநிதி இருந்து, அதன் நிர்வாகம் முழுவதையும் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அநேகமாய் அரசருடைய அதிகாரம் முழுவதையும் திவானே செலுத்தி வந்தார். அவருக்கு மாதச் சம்பளமும் பல்லாயிரக் கணக்கில்