பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 99

மகாதீரராம். அவர் பெண்ஜாதியில்லாமல் தனிமையில் இருக்கிறவராம். அவரிடம் போன ஸ்திரீ தப்பி வருகிறதே இல்லையாம். சிப்பாயிகளின் விஷயமோ சொல்லவேண்டிய தில்லை. இதையெல்லாம் நினைக்க நினைக்க என் மனம் நிரம்பவும் புண்பட்டது. ஆகையால் நான் உடனே இந்தச் சங்கதியை உனக்குத் தெரிவிக்கவில்லை. ஆனாலும், நீ முன்னே சொன்னதிலிருந்து, ஒருவேளை இவளுடைய தாயார் இவளைத் தேடிக்கொண்டு தான் எங்கேயாவது போயிருக்கிறார்களோ என்று நினைத்து, அவர்களுடைய மனவேதனையைப் போக்கு வதற்கு நான் இப்போது இந்த விஷயத்தைச் சொல்லுகிறேன். காரியம் இவ்வளவு தூரத்துக்கு வந்தபிறகு இனி நான் அவர்களுடைய வீட்டில் எப்படிக் கால் வைக்கிறது. உன்னைத் தான் நான் அதிக காலம் அவ்விடத்தில் எப்படி விட்டு வைக்கிறது. நீ என் செல்வச் சீமாட்டிக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியை நான் எப்படி நிறைவேற்றுகிறது. நீயே சொல் பார்க்கலாம். இதுவரையில் நடந்துபோனதை யெல்லாம் நான் தள்ளிவிட்டு அங்கே வந்து நம்முடைய காரியத்தைக் கவனிக் கிறோமென்று வைத்துக்கொள். கோகிலாம்பாள் இனியும் சும்மா இருப்பாளென்று நினைக்கவில்லை; அந்தக் கண்ணபிரான் முதலியார் விஷயத்தில் அவள் கொண்டுள்ள மோகத்திலும் பைத்தியத்திலும் அவள் துணிந்து எவருக்கும் அஞ்சாமல் எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்வாள் போலிருக்கிறது. அவளால் அவளுடைய குடும்பத்துக்கும் நம்முடைய குடும்பத்துக்கும் என்றைக்கும் மாறாத பழிப்பும் இழிவும் தலைக்குனிவும் நேரப்போவது நிச்சயம். இந்த தர்மசங்கடத்தில் நான் என்ன செய்கிறது என்பதை அறியாமல் விழிக்கிறேன். இல்லாவிட்டால், நான் என் ஆசைக் கண்ணாட்டியின் பிரியப்படி நடந்துகொள்ள இவ்வளவு நேரம் பின்வாங்குவேனா? கரும்பு தின்ன யாராவது லஞ்சம் கேட்பார்களா? நீயே யோசித்துச் சொல். இந்த வரலாற்றையெல்லாம் நீ நம்முடைய செளந்தராவிடம் சொன்னால், அவளுடைய மனம் புண்படும். அவன் நிரம்பவும் மானமுடைய பெண்; அவள் யாரையும் இலட்சியம் செய்யமாட்டாள். தாயென்றும் பார்க்கமாட்டாள்; தங்கை யென்றும் பார்க்கமாட்டாள். அவள் உடனே