பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iOO செளந்தர கோகிலம்

தங்களுடைய வேலைக்காரரையும் சொந்த ஜனங்களையும் கூப்பிட்டு வைத்துக்கொண்டு அக்காளையும் அம்மாளையும் அவர்களுக்கு எதிரில் மானபங்கப்படுத்தி விடுவாள். அதைச் சகிக்கமாட்டாமல் கோகிலாம்பாள் இன்றிரவே வீட்டைவிட்டு எங்கேயாவது ஓடினாலும் ஓடிவிடுவாள். அல்லது தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனாலும் போவாள். அந்தப் பழி நமக்கு உதவாது. ஆகையால், நீ இந்த வரலாற்றையெல்லாம் அதனிடம் சொல்லி, அதன் நல்ல மனசையும் சந்தோஷத்தையும் கெடுக்கவேண்டாம். இன்றிரவு எட்டு எட்டரை மணிக்கு கோகிலாம்பாள் அங்கே வந்துசேரும்படி அனுப்பிவிடுகிறேன். அதற்குள் பூஞ்சோலையம்மாளும் வந்துவிடுவார்கள்; இவள் எப்படியாவது பொய்யைச் சொல்லி மெழுகித் தப்பித்துக் கொள்ளப்படும்’ என்று நிரம்பவும் விசனமாகவும் மிகுந்த மனவேதனையைக் காட்டியும் கூறினார்.

அவரது சொற்களைக்கேட்ட செளந்தரவல்லியம்மாளது மனநிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்கள் யூகித்துக்கொள்ள வேண்டுமேயன்றி அதை விரித்துரைப்பது சாத்தியமற்ற காரியம். தான் உயிருக்குயிராக மதித்து, விரகநோய் கொண்டு சதாகாலமும் எண்ணி உருகி ஏங்கித் தவித்த சுந்தர மூர்த்தி முதலியார் தனது கருத்திற்கு இசைந்தபடி நடந்து கொள்ளப் போகிறாரா என்று நினைத்து நினைத்துத் தத்தளித்து இருந்ததற்கு நிரம்பவும் அதுகுணமாக அவரும் தன்னைவிட நூறு பங்கு அதிகமாய்த் தன்மீது காமமுற்றுத் தவிக்கிறார் என்பதை அறிந்ததும் அவளுக்குச் சுவர்க்கலோகமே வழிதிறந்து தனக்கு உள்ளிருக்கும் பேரின்ப சுகத்தை அவள் மீது மழைபோலப் பெய்தது போல அவள் உணர்ந்தாள். ஆனாலும், தான் அடைந்ததும் இனி அடைய எண்ணியதுமான பேராநந்த சுகத்திற்கு இடையூறாகத் தனது அக்காள் அத்தகைய இழிவான செய்கையில் இறங்கி அவரது மனத்தைப் புண்படுத்தி, அவரது பிரியம் மாறிப் போகத்தக்க நிலைமையை உண்டாக்கி விட்டாளே என்ற எண்ணம் பெருத்த கோபத்தையும், ஆத்திரத்தையும், பதைபதைப்பையும் உண்டாக்கியது. கண்ண பிரான் கடிதம் எழுதித் தன்னைத் தப்ப வைப்பதற்காக