பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 செளந்தர கோகிலம்

கோகிலாம்பாள் வரட்டும். அவளும் அநேகமாய் உண்மையை மறைத்தே பேசுவாள். அதற்குள் அம்மாள் அவளுடன் கலந்துபேசி, இன்ன சொந்தக்காரர் வீட்டுக்குப் போனதாய்க் சொல்லும்படி போதித்து விடுவார்கள். அவளும் அப்படியே சொல்லட்டும். நாம் பேசாமல் அதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்போம். கொஞ்ச நேரத்தில் சொந்தக்காரர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். அம்மாள் குறித்த சொந்தக்காரரும் அவசியம் வருவார். அவர் தாம் கடிதம் எழுத வில்லையென்று சொல்லப் போகிறார். இவர்களுக்கு வந்த கடிதத்தை நான் எடுத்து இதோ வைத்திருக்கிறேன். அதை நான் உனக்குக் காட்டக் கூடாதென்று இதுவரையில் மறைத்து வைத்திருந்தேன். காரியம் இவ்வளவு விபரீதத்துக்கு வந்தபிறகு இனி நான் அதை மறைத்து வைப்பது அநாவசியம். இதை நீ படித்துப் பார். இந்தக் கடிதத்தை நான் எடுத்து எல்லா ஜனங்களுக்கும் காட்டி, அம்மாள் சொன்ன புளுகையும் மூதரித்துவிட்டு, காசாரி மினியனைக்கொண்டு கோகிலாம்பாள் எங்கெங்கு போனாள் என்னென்ன செய்தாள் என்பதையும் வெளிப்படுத்தி விடுகிறேன். மினியன் ஒருவேளை மாற்றிச் சொன்னால், உன் தமயனாரைக் கொண்டு அதை உறுதிப்படுத்தி விடுவோம். இப்படியெல்லாம் இவளுடைய சாயத்தை, சொந்த ஜனங்கள் வேலைக்காரர்கள் முதலியோருக்கு முன், நான் வெளுக்க அடித்து, இவளும் கண்ணபிரானும் பூஞ்சோலையில் செய்த காரியத்தையும் வெளியிட்டு விடுகிறேன். எல்லோரையும் வைத்துக்கொண்டு நான் கேட்கிற கேள்வியில், தாயும் மகளும் இன்றோடு இந்தப் பங்களாவைவிட்டு ஒடிப்போகும்படிச் செய்து விடுகிறேன். நீ மாத்திரம் ஒரு காரியம் செய்யவேண்டும். மறுபடி நீ உன் தமயனாரை டெலிபோன் வழியாய்க் கூப்பிட்டு, கோகிலாம்பாளை ஒர் ஆள் மூலமாய் தனியாக முதலில் அனுப்பிவிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து மினியனை அழைத்துக் கொண்டு அவர்கள் வந்து சேரும்படி நீ சொல்லி எச்சரித்து வை. நான் போய் அம்மாள் வருவதற்குள் வேலைக்காரர்களை உடனே எங்கள் சொந்த ஜனங்களுடைய வீடுகளுக்குத் துரத்தி விட்டு வருகிறேன்” என்று ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் கூறியவுடன் சரேலென்று கட்டிலை விட்டிறங்கி வேலைக்