பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 9

இந்த ஊரில் நடந்ததைவிடப் பதினாயிரம் பங்கு அதிக துக்கத்தை உண்டுபண்ணிவிட்டது. திவான் எங்கேயோ கிராமத்தில் முகாம் போட்டிருந்தபோது, வெளியில் எங்கேயோ போன சமயத்தில், அவரைப் புவி தூக்கிக்கொண்டுபோய்த் தின்றுவிட்டதென்றும், உடனே கிழவர் புறப்பட்டுவந்து அவருடைய சொத்துக்களை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் அந்தத் தந்தியில் செய்தி எழுதப்பட்டிருந்தது. அதைக் கேட்டவுடனே கிழவர் அப்படியே மூர்ச்சித்து வேரற்ற மரம்போலக் கீழே சாய்ந்து விட்டார். பக்கத்திலிருந்தவர்களும் அதுபோலவே விசனக் கடலில் ஆழ்ந்து போனார்கள். ஆனாலும், கிழவரைக் கவனித்து அவருக்கு ஆகவேண்டிய உபசரணைகளைச் செய்து அவருடைய மூர்ச்சையைத் தெளியச் செய்தனர்; உடனே கிழவர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி விழுந்து புரண்டழுது புலம்பி அளவிட முடியாத விசனக் கடலில் ஆழ்ந்து போனார். காணாமல் போன மருமகளையும் பேரனையும் பற்றிக் கவலைப்பட்டு வருந்துவதா, அகால மரணமாய் இறந்து போன தமது குமாரரைப்பற்றி அழுவதா, கிழவர் என்ன செய்வார் பாவம் அவர் பைத்தியங் கொண்டவர்போல மாறி அப்படியே இடிந்து உட்கார்ந்து போய்விட்டார். பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்குப் பலவிதமான ஆறுதல்கள் கூறி யாரோ விரோதிகள் மருமகளையும் பேரனையும் கொண்டு போனதன்றி, அந்த மாதிரி பொய்த் தந்தி கொடுத்திருப்பார்களென்று சொல்லிப் பெரியவரைப் பலவாறு தேற்றி, மறுநாள் அவரையும் தவசிப்பிள்ளையையும் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் இருவரும் அந்த ஊருக்குப் போய்ப் பார்த்ததில், காந்திமதியம்மாளும் அவளுடைய பிள்ளையும் அந்த ஊரிலும் காணப்படவில்லை. ஆனால் திவானைப் புலி அடித்துத் தின்றுவிட்டதென்ற செய்தி மாத்திரம் உண்மையானதென்பது தெரியவந்தது. அந்த ஊரிலிருந்த மகாராஜன் முதலிய எல்லோரும் கிழவருக்கு நிரம்பவும் மரியாதை செய்து, ஆறுதல் சொல்லித் தேற்றி, திவானுடைய குழந்தையைப் பத்திரமாகக் காப்பாற்றி முன்னுக்குக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்களாம். அங்கே இருந்து கிழவர் சுமார் இரண்டு லக்ஷம் ரூபாய் பெறுமானமுடைய சொத்துக்களை எடுத்துக்