பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.10 செளந்தர கோகிலம்

அடியராகவும். ஸாதுவிலும் பரம ஸ்ாதுவாகவும் நடந்துகொண்டு எந்தத் தொண்டையும் இழிவாய் மதிக்காமல் எவர் கொடுத்த போஜனத்தையும் இளக்காரமாய் நினையாமல் தெய்வ பிரஸ்ாதம்போல் உண்டு உண்மையான ஞானியைப் போலவே நடந்துவந்தார். ஆயினும், அவர் சந்தித்த பெரியாருள் சாமுத்திரிகா லக்ஷணம், ரேகை சாஸ்திரம், சோதிட சாஸ்திரம் முதலியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த சிலர் நமது திவானைக் காணும் போதே, ‘அப்பனே! நீ பெருத்த பதவிக்குரிய புண்ணியாத்மாவாயிற்றே! இப்பொழுது ஏழரை நாட்டுச் சனியனுடைய கோளாறினால், நீர் இப்படிச் சீர்குலைந்து உருமாறித் திரிகிறாய்! ஏழரை வருஷம் வரையில் நீ இப்படித் தான் இருப்பாய். அதன் பிறகு, நீ இழந்த நவநிதிகள் எல்லாம் உன்னிடம் மறுபடி தாமாகவே வந்து சேரப் போகின்றன. மறுபடி நீ முன்னிருந்த பதவியைவிடப் பன்மடங்கு மேலான பதவியை அடைந்து பெண்ஜாதி பிள்ளையுடன் அமோகமாய் வாழப் போகிறாய்! அதன்பிறகு உன் ஆயுசு காலம் முடிய உனக்கு எவ்வித இன்னலும் நேராது. இது நிச்சயமான வார்த்தை, நளமகாராஜன் பிறந்த வேளையில் நீயும் பிறந்திருக்கிறாய். ஆகையால், அவ்வரசனைப்போல நீயும் சனிபகவானுடைய ஆக்கினைக்கு உள்பட்டு நடந்துதான் தீரவேண்டும்” என்று கூறினர். ஆயினும், நமது திவான் முதலியாருக்கு அவர்களது எதிர்கால ஜோசியத்தில் அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை. தமக்கு இனி பழைய நிலைமை ஏற்படப்போகிறதா என்ற மலைப்பும் அவநம்பிக்கையும் தோன்றி அவரது மனத்தை, சந்நியாச நிலைமையே தமக்குரிய பற்றுக்கோல் என்று எண்ணும் படி செய்தது. பல வருஷகாலம் வரையில் இன்பமே வடிவாகத் தமக்கருகில் இருந்து வந்த தமது அருமை மனையாட்டியான காந்திமதியம்மாளின் நினைவு அடிக்கடி மனத்தைக் கப்பிக் கொள்ளும். அவர் அறியாமல் அவரது கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக வழிந்தோடும். ‘ஆ காந்திமதி! நீயும் நானும் இருந்தது கனவோ, அல்லது நிஜமோ என்பதுகூட இப்போது சந்தேகமாய்விட்டதே! ஐயோ! என் கண்ணே நான் உயிருக்கு உயிராய் மதித்த என் பாக்கியமே! எவருக்கும் கிட்டாத பெருத்த தெய்விகச் செல்வத்தைக் கடவுள் உன் வடிவமாக எனக்கு