பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 113

நமது திவான் சிறிதளவு பொருளுதவி செய்வதையும் வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். ஊரூராய்த் திரியும் ஏழைப் பரதேசியாகிய தாம் அடிக்கடி பெருத்த பெருத்த தொகைகளை எடுத்து தானம் வழங்கினால், அதைக் காணும் பிறர் தமக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அறியவேண்டுமென்று தமக்குத் தெரியாமலேயே கவனித்திருந்து தாம் தமது மடியில் பணம் வைத்திருப்பதைக் கண்டுகொள்வார்கள் என்றும், அதனால், தமக்கு ஏதேனும் அபாயம் நேரும் என்றும் நினைத்து திவான் தமது பொக்கிஷத்தை அடிக்கடியும் அதிகமாகமாயும் வெளியில் எடுக்காமல் நிரம்பவும் எச்சரிப்பாக நடந்து கொண்டார்.

அவ்வாறு நாட்கள் கழியக்கழிய, தாம் அவ்வளவு பெருத்த பணத்தொகையைக் கட்டிக்காத்து அதைக்குறித்து இரவு பகல் கவலையுற்றது அவருக்கு அநாவசியமான பாரமாகப் பட்டது. தாம் கண்ட ஆயிரக்கணக்கான துறவிகளுள் எவரும் பணமே வைத்திருந்ததாகத் தோன்றவில்லை. அவரவர்கள் எங்கேனும் ஆகாரம் கிடைத்தால் உண்பதும் இடம் கிடைத்தால் படுப்பது மாக இருந்தனரேயன்றி, மறுநாளைக்கு என்ன செய்வது என்ற நினைவையாகிலும், தான் பணம் சேர்க்க வேண்டுமென்ற கவலையையாகிலும் கொண்டதாகவே தோன்றவில்லை. அவ்வாறு இருந்தவர்களே உண்மையில் உலகைத் துறந்த ஞானிகளென்றும், மற்ற எல்லாவற்றையும் துறந்தும் பெருத்த பணத்தொகையை மாத்திரம் துறக்காமல் சுமந்து திரியும் தாம் போலித் துறவியேயன்றி உண்மைத் துறவியல்ல என்றும், அந்தப் பொருள் தம்மிடம் இருக்கும் வரையில் தாம் கடைத்தேறப் போவதில்லை என்றும் அவர் எண்ணத் தொடங்கினார். ஆகவே, தாம் கூடியவிரைவில் அந்தத் தொகையை எவரேனும் சற்பாத்திரர்களாய்ப் பார்த்து அவர்களுக்கு வழங்கிவிட்டு, உண்மைத் துறவியாகிவிட வேண்டுமென்ற தீர்மானத்தை அவர் செய்துகொண்டதன்றி, தாம் அதை எவருக்குக் கொடுக்கலாம் என்று பல தினங்கள் வரையில் அதே சிந்தனையாக இருந்தபடி தெற்கில் பிரயாணம் செய்துகொண்டே வந்தார். அப்போதும் அவருக்கு அடிக்கடி காந்திமதியம்மாளைப்பற்றிய நினைவும் ராஜாபகதூரைப் பற்றிய நினைவும் அடிக்கடி தோன்றி அவரது Q5.65m.III-8