பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 115

செய்தேனோ தெரியவில்லையே! ஆ! என் ராஜாபகதூரை நினைக்க நினைக்க, என் மனமும் அங்கமும் உருகி உட்கார்ந்து போகின்றனவே. எனக்கு இன்பச் சுடர் கொளுத்தும் என் அருந்தவச் செல்வனே இவ்வளவு நீண்ட காலமாய் நான் பார்க்காமல் இருந்தும் என் உயிர் போகாமல் எப்படித்தான் இந்த உடலில் நிலைத்திருக்கிறதென்பது எனக்கே தெரிய வில்லையே. ஐயோ! கண்ணே உன் தேகத்தைக் கட்டி அணைக்காமல் என் அங்கமெல்லாம் குழைகிறதே! உன் அழகான சொற்களைக் கேளாமல், என் செவிகளெல்லாம் பாழ்த்துப்போய் விட்டனவே! தாமரை மலருவது போல எப்போதும் இனிமை யாகச் சிரிக்கும் உன் முகத்தைக் காணாமல் என் கண்களுக்கு இந்த உலகமே இருண்டு அழகற்றுத் தோன்றுகிறதே. ஹா’ என்ன செய்வேன்; நான் எவ்வளவுதான் பட்டினிபோட்டுக் கொன்றாலும் இந்தப் பாவியுடல் அழியமாட்டேன் என்கிறதே! ஈசா ஈசா கருணாநிதே! பரமகிருபாநிதே! இந்த ஏழையேன் தவிப்பது உன் திருவருளுக்குத் தெரியவில்லையா என்மேல் கருணை பாலிக்கலாகாதா என்னை உன் பாதார விந்தங்களில் சேர்த்துக்கொள்ளுமுன் என் அருங்குண மணியின் முகத்தை எனக்கு ஒரு முறையாவது காட்டுவாயோ மாட்டாயோ தெரியவில்லையே! ஆ என் கண்மணியே இவ்வளவு சிறிய வயசில் நீ எவ்வளவோ நியாயமெல்லாம் பேசுவாயே! எவரேனும் தவறாகப் பேசினாலோ, அல்லது நடந்து கொண்டாலோ, கூசாமல் நீ அவர்களைத் திருத்தும் அழகென்ன! நியாயாதிபதியைப் போல நடுநிலை தவறாமல் எதையும் நீ முடிவுசெய்யும் உன் அபாரபுத்தி யென்ன! உன். தாயாரிடம் எவ்வளவுதான் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்து, அவளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தாலும், அவளுடைய துர்நடத்தை யைக் கண்டு நீ கண்டிக்காமல் எப்படிப் பொறுத்துக்கொண்டு அவளுக்கு அநுசரணையாக இருக்கிறாய் என்பது தெரிய வில்லையே! சே! நீ ஒரு நாளும் அப்படி இருக்கவே மாட்டாய்! உன் தாயாக இருந்தாலும், அவள் கெட்ட வழியில் பிரவேசித்தால், நீ அதைக்கண்டு ஒரு நிமிஷமும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டாய். அவள் தன்னுடைய துர்நடத்தை உனக்குத் தெரியாதபடி நிரம்பவும் ஜாக்கிரதையாகவும்