பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 செளந்தர கோகிலம்

கொண்டு நாலைந்து தினங்களில் இங்கே வந்து சேர்ந்தார். ஏற்கனவே, இந்த ஊரில் அவருடைய வசத்தில் ஒரு லக்ஷம் ரூபாய் பெறுமானமுடைய சொத்து இருந்தது. ஆகமொத்தம் மூன்று லக்ஷம் ரூபாய் பெறுமானமுடைய சொத்து அவரிடம் இருந்தது. ஆனாலும், திடீரென்று தம்முடைய குமாரரையும் மருமகளையும், பேரனையும் ஒரே காலத்தில் இழந்த துக்கம் சகிக்க முடியாததாகி விட்டது. அவர் உடனே நோயில் விழுந்து விட்டார். அவருடன் வெகுகாலமாக இருந்துவரும் இராமலிங்கம் என்ற தவசிப்பிள்ளை அவருடைய சுய ஜாதியைச் சேர்ந்த மனிதர். அவருக்குச் சம்சாரமும், பிறகு பதினாறு அல்லது பதினேழு வயசில் ஒரு பிள்ளையும், பதின்மூன்று வயசில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். கிழவர் நோயாய்ப் படுத்தவுடனே, அவரை ஓயாமல் கவனிக்கவும் அவருக்கு வேண்டிய சிகிச்சை களைச் செய்யவும் மனிதர்கள் வேண்டுமென்று, தவசிப்பிள்ளை தம்முடைய சம்சாரம், பிள்ளை பெண் ஆகிய எல்லோரையும் இந்த இடத்துக்கே அழைத்துக்கொண்டார். எல்லோரும் இரவு பகல் பாடுபட்டுக் கிழவருக்கு மருந்துகள் கொடுத்துப் பத்தியச் சாப்பாடு போட்டு அவருக்கு ஆறுதல் பல சொல்லி அவருடைய மனசையும் உடம்பையும் தேற்றினார்கள். ஒரு மாசகாலத்தில் கிழவருடைய விசனம் ஒரு விதமான சமனமடைந்தது. அவருடைய உடம்பும் கொஞ்சம் தேறியது. அதுவுமன்றி, இன்னொறு மாறுதலும் காணப்பட்டது. அந்தத் தவசிப் பிள்ளையும் அவருடைய குடும்பத்தாரும் கிழவரைத் தங்கள் சொந்த மனிதரைவிடப் பன்மடங்கு அதிக பிரியமாகவும் பட்சமாகவும் நடத்தினார்கள். அதுபோலவே, கிழவருக்கும் அவர்களிடம் ஒருவிதப் பற்றும் வாஞ்சையும் உண்டாகிவிட்டன. தம்முடைய நெருங்கிய பந்துக்கள் எல்லோரும் போய்விட்ட தனால், தாம் நிராதரவாக இருந்த சமயத்தில் அவர்கள் தம்முடைய பந்துக்களைவிட நூறு மடங்கு அதிகப் பற்றுதலாக

வும், பிரியமாகவும், பணிவாகவும் இருந்ததைக் காணக் காண, அவர்களுடைய பாந்தவ்வியம் தமக்கு அத்தியாவசியமானது என்றும், அவர்கள் இல்லாவிட்டால் தாம் ஒரு நிமிஷங்கூட உயிரோடிருக்க முடியாதென்றும் கிழவர் எண்ணத் தொடங்கினார். தமக்குப் பிறகு, தம்முடைய மூன்று லசும்