பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 121

மில்லை போலிருக்கிறது. போகட்டும். என் தகப்பனாருக்கு அநேகமாய் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கலாம். அவர்களாவது சுகப்படட்டும். நான் எப்படியாவது தந்திரம் செய்து இந்தப் பணத்தை என் தகப்பனாரிடம் சேர்த்துவிடுகி றேன் என்று திவான் சாமியார் தீர்மானித்துக்கொண்டு தமது மாளிகை இருந்த தெருவை நோக்கி நடக்கலானார். துக்கமும், ஏக்கமும், ஏமாற்றமும் ஒரே மூர்க்கமாக அவரது மனத்தைச் சூழ்ந்து கப்பிக் கொண்டன. ஆயினும், தாம் தமது அருமைத் தந்தையைக் காணப் போகிறோம் என்ற நினைவினால் சிறிதளவு ஊக்கமும் உற்சாகமும் மனத்தெளிவும் கொண்டு அவர் தளர்நடை நடந்து, இரண்டொரு நிமிஷ நேரத்தில் தமது மாளிகையின் வாசலை அடைந்து, அதற்கு எதிரிலிருந்த வீட்டின் வாசல் திண்ணைக்குப் போய், அதன் மேல் உட்கார்ந்து கொண்டு மிகுந்த ஆவலோடும் ஆசையோடும் எதிர்த்த வீட்டை நோக்கி, யாராகிலும் மனிதர்கள் வெளியில் வருகிறார்களோ என்று பார்த்துக் கொண்டே இருந்தார். சில குழந்தைகள் உள்ளே இருந்து ஓடிவருவதும், மறுபடி உள்ளேபோவதுமாய் இருந்ததைக் காணவே, நமது திவான் சாமியாரின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. மனம் ஆநந்தமடைந்தது. அக் குழந்தைகள் அநேகமாய்த் தமது தந்தையின் இரண்டாந்தாரத்துக் குழந்தைகளாகத்தான் இருக்கவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு அதைக் குறித்து அபாரமான மகிழ்ச்சியும், குதூகலமும் அடைந்தவராய்த் தமது பிதா அப்போது வீட்டில் இருக்கிறாரோ, வெளியில் வருவாரோ மாட்டாரோ என்று பலவாறு ஐயமுற்று ஆவலே வடிவாக வீற்றிருக்க, அவர் உட்கார்ந்திருந்த வீட்டிற் குள்ளிருந்து ஒரு ஸ்திரீ வெளியில் வந்தாள். வந்தவள் திண்ணை யில் உட்கார்ந்திருந்த சாமியாரைப் பார்த்துப் பதுங்கி ஒதுங்கி தூர விலகி வெளியில் வந்து குறட்டின் மேல் ஒரு பக்கமாக நின்ற வண்ணம் அவரைப் பார்ப்பதும், அவர் யாரென்று கேட்கலாமோ கூடாதோவென்று சந்தேகம் கொள்வதும், பிறகு தெருவைப் பார்ப்பதுமாய் நின்றாள். *.

அப்போது நமது சாமியாரும் நிமிர்ந்து அந்த ஸ்திரீயின் முகத்தைப் பார்க்க, அதற்கு முன் தமது தந்தையின் கலியான தினத்தன்று தாம் உட்கார்ந்திருந்த சமயத்தில் தம்முடன் பேசிய