பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ize செளந்தர கோகிலம்

ஸ்திரீயே என்பது உடனே தெரிந்து போய் விட்டது. ஆயினும், அந்த அம்மாள் முன்னர் இருந்ததைவிட வயது முதிர்ச்சி அடைந்து தளர்ந்து போய்க் காணப்பட்டாள். அவர் உடனே அந்த ஸ்திரியை நோக்கி மரியாதையாகவும் நயமாகவும் பேசத்தொடங்கி, ‘அம்மணி என்னுடைய அடையாளம் உங்களுக்குத் தெரிகிறதா?” என்றார்.

அந்த ஸ்திரீ வியப்படைந்து அவரை நன்றாக உற்றுப் பார்த்து, ‘அடையாளம் தெரியவில்லையே? நீங்கள் யார்? இதற்கு முன் எப்போது என்னைப் பார்த்தீர்கள்?’ என்றாள்.

சாமியார், ‘தாயே! உங்களுடைய அடையாளம் எனக்கு நன்றாய்த் தெரிகிறதே! உங்களுக்கு என் அடையாளம் தெரிய வில்லையா? எதிர்த்த வீட்டிலுள்ள பெரியவருக்கு இரண்டாவது கலியாணம் நடந்த அன்றைய தினம் நான் வந்து இதே திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அப்போது பந்தலில் மேளக் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. நீங்கள் வெளியில் வந்தீர்கள். அப்போது நான் உங்களோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அப்போது என் தலை மொட்டையாக இருந்தது. இப்போது என் முகமும் தலையும் தாடியும் ஜடைகளுமாய் இருக்கின்றன. ஆகையால், உங்களுக்கு என் அடையாளம் தெரியவில்லை போலிருக்கிறது” என்றார்.

அந்த ஸ்திரீ ஆச்சரியத்தோடு அவரை உற்றுநோக்கிச் சிறிது நேரம் யோசனை செய்து பார்த்து, “ஒகோ அப்படியா ஆம். இருக்கலாம்! எனக்கு ஒருவிதமாக நினைவுண்டாகிறது. அது இப்போதைக்குச் சுமார் ஏழு வருஷங்களுக்கு முன் நடந்த சங்கதியல்லவா?” என்றாள்.

சாமியார், ‘கிழவருக்குக் கலியாணமாகி இப்போது ஏழு வருஷ காலம் ஆகிவிட்டதா! கலியாணம் நேற்று நடந்த மாதிரியாக இருக்கிறதே! பெரியவருக்கு ஏதாவது குழந்தைகள் இருக்கின்றனவா? அதோ திண்ணையில் இருக்கின்றனவே, அவைகள் பெரியவருடைய குழந்தைகளா! பெரியவருடைய மருமகள் பேரன் முதலியவர்களைப் பற்றி அதற்குப் பிறகு ஏதாவது செய்து கிடைத்ததா? கிழவர் திடமாக இருக்கிறாரா?” என்று நயமாக வினவினார். அவரது சொற்களைக் கேட்ட அந்த