பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 123

ஸ்திரீயினது முகத்தில் பரிகாசப் புன்னகை அரும்பியது. அவள் வியப்போடு அவரது முகத்தை நோக்கி, ‘சாமியார் ஐயா கேட்கிற கேள்விகளைப் பார்த்தால், கலியாணத்துக்குப் பிற்பாடு இதுவரையில் சாமியார் ஐயா இந்த உலகத்திலேயே இல்லை போலிருக்கிறதே! இவ்விடத்துச் செய்தியே எதுவும் உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறதே!” என்றாள்.

சாமியார் திடுக்கிட்டு மிகுந்த திகிலும் கலவரமும் அடைந்து அந்த ஸ்திரீ எவ்விதமான விபரீதச் செய்தியைத் தெரிவிப்பாளோ என்ற கவலையும் கலக்கமும் கொண்டார். ஆனாலும், தமக்கு அந்தக் குடும்பத்தில் ஏதோ சம்பந்தமிருப்பதாய் அவள் சந்தேகங் கொண்டு விடுவாள் என்கிற நினைவினால் அரும்பாடுபட்டுத் தம்மை அடக்கிக்கொண்டு, ‘ஏழு வருஷத்திற்கு முன் இங்கிருந்து புறப்பட்டுப்போன நான் வடக்கே காசி காஷ்மீர் வரையில் யாத்திரை போய்விட்டு. இப்போதுதான் நேராகத் திரும்பி வருகிறேன். நான் இந்த ஊருக்கு வந்து இன்னும் அரை நாழிகை கூட ஆயிருக்காது. வந்தவன் நேராக இந்தத் திண்ணைக்கே வந்தேன். எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. ஏனம்மா? ஏதாவது விசேஷமுண்டா? பெரியவர் rேமமாயிருக்கிறார் அல்லவா?’ என்றார்.

அந்த ஸ்திரீ “சரி, சரி! உங்களுக்கு ஒன்றுமே தெரியாது போலிருக்கிறது; கிழவர் செத்துப்போய் இரண்டு வருஷத்துக்கும் மேல் ஆகிறதே! அவருடைய குடும்பமே பூண்டற்றுப் போய்விட்டதே!” என்றாள்.

தமது ஆருயிர் தந்தை இறந்துபோய்விட்டார் என்ற துக்க கரமான செய்தியைக் கேட்கவே, நமது திவான் முதலியாரது தேகம் தானாகவே கிடுகிடென்று ஆடியது. அவரது உயிரில் பெரும் பாகமும் போய்விட்டதென்றே மதிக்கவேண்டும். அவரது மூளையும் அறிவும் குழம்பிப் போயின. அது பூமியோ ஆகாயமோ என்பது தெரியாதபடி அவருக்குப் பெருத்த கலக்கம் ஏற்பட்டுவிட்டது. தாங்கவொண்ணாத பெருத்த துக்கம் எழுந்து கப்பிக் கொண்டது. அபாரமான விசையோடு அழுகை பொங்கி நெஞ்சையடைத்தது. கண்களிலிருந்து கண்ணிர் குபிரென்று வழியத் தொடங்கியது. திடீரென்று பொங்கியெழுந்த