பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 செளந்தர கோகிலம்

இம்யும் கருத்தோடு ஒரு தெருவின் வழியாக நடந்து ஆந்து கொண்டிருக்கையில், ஒருவிட்டு வாசலில் “ஐயோ! அப்பா அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே இந்தப் பாழும் பிராணன் போகமாட்டேன் என்கிறதே” என்று ஒர் ஒசை கேட்டது. அங்கு நின்ற சிலர், “இறங்கடா திண்ணையைவிட்டு. கூடியரோகம் பிடித்த கிழக் கழுதை! திண்ணையில் படுத்து எங்கு பார்த்தாலும் காறிக்காறிக் கோழையைத் துப்பி எப்போது பார்த்தாலும் கொள் கொள்ளென்று இருமிக்கொண்டே படுத்திருக்கிறாய்! எழுந்து போய் ஊருக்கு வெளியிலுள்ள பாழுஞ்சாவடியில் படுத்துக் கொள். இது தொற்று வியாதி. உன் எச்சிலைக் குழந்தை குட்டிகள் மிதித்தால் அவர்களுக்கும் கூடியரோகம் தொற்றிக் கொள்ளும்” என்று கூறி அதட்டி, திண்ணையில் படுத்திருந்த ஒரு குடு குடு கிழவனை இரண்டு மூன்று மனிதராய்ப் பிடித்து

பலவந்தப்படுத்தித் தூக்கி ரஸ்தாவில் எறிந்து அடிக்கவும் உதைக்கவும் முயன்றனர். அந்தக் கிழவனுடைய உடம்பில் எலும்பும் தோலுமே காணப்பட்டன. பார்வைக்கு அவனுக்கு எண்பது வயது ஆயிருக்கலாம் போலத் தோன்றியது. அவனது தோல்கள் சுருங்கித் திரைந்து காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. அவனது இடையில் அழுக்கடைந்த ஒரு கோவணமும், தோளின் மேல் ஒரு கந்தைத் துணியும் காணப் பட்டன. அவனது வலக்கரத்தில் ஒரு மூங்கில் கோலும், இடது கையில் ஒரு தகரக் குவளையும் இருந்தன. அவன் வாய் ஒயாமல் இருமி இருமி சகிக்க வொண்ணாதபடி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான். அவ்வாறு மகா பரிதாபகரமான நிலைமையில் இருந்த ஒரு பிச்சைக்காரனை சில சண்டாளர்கள் சிறிதும் ஜீவகாருண்யம் ஈவிரக்கம் முதலியன இன்றி வெளியேற்றி ரஸ்தாவில் கொணர்ந்து போட்டு வதைத்ததைக் கண்ட நமது திவான் முதலியார் அப்படியே பதைத்துப் போனார். நோய் வாய்ப்பட்டு அப்போதோ, அடுத்த நிமிஷமோ இறப்பது என்ற நிலைமையில் இருந்த அந்தக் கிழவனை அந்தக் கிராதகர்கள் அப்படியும் கொடுமையாய் நடத்துகிறார்களே என்ற எண்ணத்தினால் திவான் பதறிப் போனார். அவரது மனத்தில் மலைபோல அழுத்திக் கொண்டிருந்த பெருந்துயரத்தை யெல்லாம் அவர் அந்த ஒருநிமிஷ நேரம் மறந்து ஆவேசம்