பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 செளந்தர கோகிலம்

போகிறார்கள். என்னப்பன் என் தெய்வம்! நீங்கள் இந்தச் சமயம் வந்து என்னை இவ்வளவு அருமையாக நடத்தி பிரியமாக உபசரிப்பதைப் பார்த்தால் கடவுளே என் மேல் இரக்கங் கொண்டு உங்கள் ரூபமாய் என்னைக் காப்பாற்ற வந்திருப்பதாக நான் எண்ணுகிறேன். சுவாமி! நான் உங்களைவிட வயசில் பெரியவன். நான் கையெடுத்து உங்களைக் கும்பிட்டால் உங்களுக்குக் கெடுதல் என்று சொல்லுவார்கள். ஆகையால், உங்கள் பெற்றோர் பெரியோருக்கு நான் நமஸ்காரம் பண்ணுகிறேன்’ என்று நிரம்பவும் உருக்கமாகவும் வணக்க மாகவும் கண்ணிர் விடுத்துக் கூறிய வண்ணம் தனது இரண்டு கைகளையும் குவித்து திவான் முதலியாருக்குப் பன்முறை கும்பிடு போட்டான்.

தோற்றத்தில் அவன் கேவலம் பிச்சைக்காரன்போல இருந்தாலும், அவனது சொற்கள் படிப்பாளியின் சொற்கள் போல ஒழுங்காகவும் விநயமாகவும் இருந்ததைக் கண்ட திவான் சாமியார் உடனே அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு மறுபடி அந்த ஊருக்குள் சென்று நேராக ஜவுளிக் கடைக்குப் போய் இடுப்பில் உடுத்திக் கொள்ளத்தக்க வஸ்திரங்கள் நான்கு மேலே அணியத்தக்க அங்கவஸ்திரங்கள் நான்கு, கம்பளிச் சால்வை பொன்று, கீழே போட்டுப் படுத்துக் கொள்வதற்கு ஜமக்காளம் ஒன்று ஆகிய ஜவுளிகள் எல்லாவற்றையும் வாங்கி ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு பாத்திரக்கடைக்குப் போய் இரண்டு மூன்று பாத்திரங்களை விலைக்கு வாங்கி எடுத்துக்கொண்டு நேராக அந்த ஊர்ச் சோற்றுக் கடையை அடைந்து புதிதாக அப்போதே தயாரிக்கப்பட்டு சுடச்சுட இருந்த அன்னம், குழம்பு, கறிகள், அப்பளம், நெய், வாழை இலை முதலியவற்றை வாங்கி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விரைவாகச் சாவடிக்கு வந்து சேர்ந்தார். சேர்ந்தவர் தாம் கொண்டு வந்திருந்த ஜவுளிகளையும், அன்னம் முதலிய ஆகார பதார்த்தங்களையும் எடுத்துக் கிழவனுக்கு முன் வைக்கவே, அத்தனை சாமான்கள் தனக்கு வந்து சேரும் என்று கனவிலும் எதிர்பார்க்காத அந்தக் கிழவன் தனது கண்களையே நம்பாமல் களிப்பும் பேரின்பமும் அடைந்து பூரித்து அப்படியே ஸ்தம்பித்துப்போய்த் தனது மூக்கின்மேல் விரலை வைத்து,