பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 131

கவாமிகளே! எனக்கு இன்றுமுதல் மறுபடியும் சுக்கிர தசை ஆரம்பமாகிறது போலிருக்கிறது. என் உடம்பிலுள்ள இந்தக் கோவனமும் கந்தைத் துணியுமே எனக்குக் கடைசி மோவாசை யென்றல்லவா நான் எண்ணியிருந்தேன். நான் சுடச்சுட சாதமும், குழம்பும் கண்ணால் கண்டு எவ்வளவோ காலமாய் விட்டது. இப்படிப்பட்ட பாக்கியம் மறுபடியும் எனக்குக் இடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. பட்டினி கிடந்து இப்படியே எங்கேயாவது திண்ணையில் மாண்டு கிடப்பேன் என்று எண்ணினேன். தெய்வத்தின் கருணா கடாக்ஷம் மறுபடியும் என் பக்கம் கொஞ்சம் வீசுகிறது. நீங்களே இப்போது எனக்குப் பேசும் தெய்வம். உங்களைப் பார்த்தால், உலகைத் துறந்த பரதேசி போல் இருக்கிறீர்கள். உங்களுக்கு இவ்வளவு விலை பெற்ற சாமான்கள் இவ்வளவு சுலபத்தில் கிடைத்ததுதான் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. எல்லாம் எனையாளும் ஈசன் செயல்; கொடுப்பவனும் அவன், குறைப்பவனும் அவன் எடுப்பவனும் அவன். நம்மால் ஆவது ஒன்றுமில்லை” என்று தழுதழுத்த குரலில் கூறித் தமது நன்றியறிதலின் பெருக்கையும் உள்ளத்தின் உவகையையும் எடுத்துக் காட்ட, உடனே சாமியார், ‘ஐயா! நீங்கள் எனக்கு உபசார வார்த்தை சொல்வது இருக்கட்டும். முதலில் காரியத்தைப் பாருங்கள்’ என்று வாத்ஸல்யத்தோடு கூறினார்.

உடனே அந்தக் கிழவன் பாலியப் பருவத்தின் திடத்தையும் தேக பலத்தையும் அடைந்து விட்டவன் போல மாறிப்போய்த் தட்டுத்தடுமாறி எழுந்து, எதிரிலிருந்த ஒரு வாய்க்காலுக்குச் சென்று தனது தேகத்தைச் சுத்தம் செய்துகொண்டு திரும்பி வந்து திவான் சாமியார் கொணர்ந்திருந்த வஸ்திரங்களுள் ஒன்றை எடுத்து இடையில் அணிந்து வேறொன்றை எடுத்து உடம்பைப் போர்த்திக்கொண்டு சாமியாரிடமிருந்த விபூதியை வாங்கி அணிந்து கொண்டு ஐந்து நிமிஷம் வரையில் விசத்தியானம் செய்து கடவுளைப் பிரார்த்தித்தபின் கீழே உட்கார்ந்துகொள்ள, திவான் சாமியார் அவனுக்கெதிரில் வாழை இலையை விரித்து அன்னம் முதலியவற்றை எடுத்துப் பரிமாற, கிழவனது போஜனம் திருப்திகரமாக நிறைவேறியது. நெடுநாள் பட்டினி கிடந்து சரகு போலக் காய்ந்து சாரமற்றுப் போயிருந்த கிழவனது உடம்பில்