பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 செளந்தர கோகிலம்

கிழவன் : சுவாமிகளே! நான் பூடகமாய்ப் பேசிக் கொண்டே போனால் உங்களுக்கு இது விளங்கவே விளங்காது. இது எவ்விடத்திலாவது சாதாரணமாய் நடக்கிற காரியமாக இருந்தாலல்லவா இது மனசில் படும். இது எந்த இடத்திலும் நடவாத மகா புதுமையான விஷயம். ஆகையால், நான் சொன்னால்தான் இது தெரியும். சொல்லுகிறேன் கேளுங்கள். நான் இப்போது பார்வைக்குப் பிச்சைக்காரனாக இருந்தாலும் கொஞ்ச காலத்துக்குமுன் வரையில் பெரிய லக்ஷாதிபதியாய் இருந்தவன். என் பெண்ஜாதி உறவினர்கள் முதலியோர் இன்னமும் இருக்கிறார்கள். என்னைப்போல அபாரமான செல்வத்திலும், செல்வாக்கிலும், பெருமைப்பாட்டிலும் இருந்தவனும் இல்லை, என்னைப்போல ஒரு நிமிஷத்தில் பிச்சைக்காரனாய்க் கேவலம் நடைப் பிணமாய் நடத்தப்பட்டு விரட்டப்பட்டவனும் இல்லையென்றே சொல்ல வேண்டும். எனக்கு வயசு முதிர்ந்து போனமையால், அடிக்கடி எனக்கு மார்படைப்பும், மயக்கமும் உண்டாவது வழக்கம். தண்ணீர் குடித்து, நாலைந்து ஏப்பம் விட்டால் அந்த உடத்திரவம் உடனே சாதாரணமாய் விலகிப்போய்விடும். நான் கடைசியாய் என் சம்சாரத்துடனும் மற்ற சொந்த ஜனங்களுடனும் இருந்து தாம்பூலம் போட்டுக் கொண்டிருந்தபோது எனக்குத் திடீரென்று மார்படைப்பும், மயக்கமும் வந்துவிட்டன. அதற்குமுன் அந்த உடத்திரவம் கொஞ்ச நேரம் இருந்து விலகிப்போகும். அந்தத் தடவை விலகவே இல்லை. என் பிரக்ஞை எனக்குச் சுத்தமாய் இல்லாமல் போய்விட்டது. அந்தமாதிரி நான் எவ்வளவு நேரம் இருந்தேன் என்பதும் இடையில் என்னென்ன காரியங்கள் நடந்தன என்பதும் எனக்குத் தெரியவே இல்லை. ஆனால், நான் மறுபடி விழித்துக்கொண்டு பார்க்கையில், நான் எங்கே இருந்தேன் தெரியுமா? எங்கள் ஊர்ச் சுடுகாட்டில் கட்டைகளும் மூட்டைகளும் நெருப்பும் புகையுமாயிருந்த ஒரு சிதையின்மேல் நான் இருக்கக் கண்டேன். நெருப்பு நாலா பக்கங்களிலும் என்னைச் சுட்டதை உணர்ந்து அதைப் பொறுக்க மாட்டாமல் நான் துள்ளி, சிதையைவிட்டு வெளியில் குதித்தேன். அப்போது நடுநிசி வேளை எங்கும் ஒரே இருள் மயமாய் நிறைந்திருந்தது. அது குளிர்காலம். ஆகையால், எங்கும் ஒரே பனியாக மூடிக்