பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் i35

கொண்டிருந்தது. நான் வஸ்திரம் அரைநாண்கயிறு முதலிய எந்தத் தொந்தரவும் இல்லாமல் பிறந்த மேனியாய் நின்றேன்; சிறிது தூரத்தில் பிணம் சுடும் தோட்டி கையும் தடியுமாய் உட்கார்ந்து கொண்டிருந்தவன், நான் திடீரென்று எழுந்து நின்றதைக் கண்டு திடுக்கிட்டுத் திகில் கொண்டு எழுந்து நடு நடுங்கி என்னை உற்றுப் பார்த்தவண்ணம் எனக்கருகில் நெருங்கி வந்தான். அந்த ஊரில் நான் பெருத்த பணக்காரன். ஆகையால், நான் அவனுக்கு வருஷ வாரி நெல் பணம் முதலியவை கொடுத்து அவனுடைய குடும்பத்தைக் காப்பாற்றுகிறவன். ஆகையால், அவன் என்னிடம் அதிக பயபக்தி விசுவாசத்தோடு நடந்துகொள்வது வழக்கம். மார்பு அடைத்ததனால் மயங்கி விழுந்த நான் சுடுகாட்டில் சிதையின் மேல் இருந்தது எனக்கு எப்படி அபாரமான வியப்பாக இருந்ததோ, அதுபோல, செத்துப் போய் எரிந்துகொண்டிருந்த பிணம் திடீரென்று எழுந்து நின்றது அவனுக்கு வியப்பாகவும் திகிலாகவும் இருந்தது. இருவரும் ஒருவரை யொருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டோம். உடனே நான், ‘'அடே! காத்தான்! நான் இப்போது இங்கே இருப்பதைப் பார்த்தால், நான் இறந்துபோய் விட்டேன் என்று எண்ணி என்னுடைய ஜனங்கள் என்னைத் துக்கிக் கொண்டு வந்து சிதையில் படுக்க வைத்து தீ மூட்டிப் போய்விட்டார்கள் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. உண்மையில் என் உயிர் போகாமல் இருக்கையில் ஜனங்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்பது தெரியவில்லையே!” என்றேன். உடனே காத்தான் அளவிட முடியாத ஆச்சரியமும் பூரிப்பும் அடைந்து, தன் கையை எடுத்து வணக்கமாகக்கும்பிட்டு, ‘சாமி! எசமானே! தர்ம ராசாவே! நீங்க எறந்துட்டீங்கன்னு கேட்டதும் எம் மனசு கொத்திச்சுப் போச்சு சாமீ! எனக்கும் எம்புள்ளே குட்டிங் களுக்கும் தாராளமாக்கஞ்சி வாக்கற கர்ண மவராசா எறந்து பூட்டாறென்னு நாங்களாம் அளுதது சொல்லி முடியாது. நல்லவேளை பொளச்சிக்கிட்டீங்க! எங்க உள்ளம் குளுந்துதுங்க. ஒங்களுக்கு மாரடெச்சு மூச்சு பேச்சு எல்லாம் நின்னு போச்சு தாம். ஒடம்பெல்லாம் சில்லிட்டுப் போச்சாம். மத்தியானம் மொதக்கொண்டு ராத்திரி பத்து நாள் வரையிலே அப்பிடியே இருந்திச்சாம், எல்லோரும் பார்த்து எஜமானுக்கு உசிரு