பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 137

ஒரு வேளை அது எளுந்து குந்தி இருக்கும். தடியாலே ஒரே அடியா அடிச்சு இடுப்பெ முறிச்சு நெருப்புலே போட்டுடக் கூடாதா. நீ இந்தச் சங்கதியெச் சொல்லவா வந்தே, போ. ஒடனே அடிச்சு நெருப்புலெ போட்டுக் கொளுத்திப்புடு” இனாங்க. அதெக் கேட்ட ஒடனே என் வவுறு பத்தி எரிஞ்சு போயிடுடிச்சு எசமானே! சொந்தப் பொஞ்சாதி இப்பிடியும் மனந் துணிஞ்சு சொல்லுவாங்களான்னு நானு ஆச்சரியப்பட்டுப் பூட்டெனுங்க. அப்பாலே நான் அவுங்களெப் பாத்து, தாயே! அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க, எசமான் சாவக்கீவ இல்லீங்க. நெருப்புச் சூடு பட்ட ஒடனே மாரடெப்பு, சடக்குனு நீங்கிப்போயி பொளெச்சி எளுந்து உசிரோட இருக்குறாங்க. உசிரோட இருக்கறவங்களே அடிச்சிக் கொல்ல, நானு கொலெ காரனல்லங்க. அப்பிடி நானு ஒரு நாளும் செய்ய மாட்டேனுங்க இன்னேன். ஒடனே அவுங்க என்னா சொன்னாங்க தெரியுமா? அடே காத்தான்! எறந்து போனதாக மந்திரம் கிந்தரமெல்லாம் சொல்லிக் கொளுத்தின பொற வாலெ மணிசரு ஊருக்குள்ளற வந்தா, அவுங்க சொந்த மணிசரும் அவரெப் பார்க்கவே கூடாது. அவரு தப்பித்தவறி வந்தா யாராச்சும் அடிச்சுக் கொன்னுப்புடுவாங்க. நீ ஒரு காரியம் செய்யி. நாங்க ஒங்கையிலே ஆயிரம் ரூவா பணமும் ரெண்டு துணியும் தாரோம். அதெக் கொண்டு போயி அவருக்கிட்டே குடுத்து ராவோடெ ராவாப் பொறப்புட்டு எங்கிடாச்சும் தொலை தூரத்துக்கு அப்பாலே போயிடச் சொல்லு. இந்தப் பக்கத்துலேயே அவரு இன்னமே தலை காட்டினா, அநியாயமா அவரெ அடிச்சுக் கொன்னுப்புடுவாங்க. நீயும் இந்தச் சங்கதியெ யாருக்கும் சொல்லாதே. ஒனக்கும் ஒரு நூறு ரூவா தாரோம்’ இன்னு சொல்லி ஒங்கிளுக்கு ரெண்டு துணியும் ஆயிர ருவா பணமும் எனக்கு நூறு ரூவாயும் குடுத்தாங்க. நானு அதுக்கு மேலே மறுத்துச் சொல்ல முடியவீங்க. அதெயெல்லாம் எடுத்துக்கிட்டு வந்துட்டேனுங்க. அம்பிட்டுதான் சங்கதி. எல்லாம் இதோ இருக்குதுங்க. எசமான் பிரியப்படி செய்யுங்க” என்றான். அந்த வரலாற்றைக் கேட்டவுடன் என் மனம் எப்படி கொதித்திருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அதற்குமேல் என்ன செய்கிறது, நான் வெகுநேரம் வரையில்