பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 செளந்தர கோகிலம்

ஒரு நிமிஷங்கூட உங்களுக்குக் கமலவல்லி இல்லாமல் காரிய ஆகமாட்டேனென்கிறதே. மாயூரத்திலிருந்து யாரோ சில: பெண் கேட்க வந்து, என் தாயார் தகப்பனாருடன் அடிக்கடி பேசிவிட்டுப் போகிறார்கள். என்னை இவர்கள் மாயூரத்தில் கட்டிக்கொடுத்துவிட்டால், அதற்குப்பிறகு நீங்கள் எந்தச் கமலவல்லியைக் கூப்பிடுவீர்கள்?’ என்று நிரம்பவும் பிரியமாக வும் வாஞ்சையாகவும் உருக்கமாகவும் சொன்னாளாம். அதைக் கேட்ட கிழவருடைய முகம் உடனே வாடிப் போய்விட்டதாம். அவருடைய மனசில் ஒருவித ஏக்கம் உண்டாய் விட்டதாம். அவர் அதிக விசனமடைந்து கொஞ்சநேரம் மெளனமாக இருந்தாராம். உடனே பெண் “தாத்தா என்னை நீங்களே கட்டிக் கொண்டுவிடுங்கள். எனக்கும் உங்களை விட்டுப் பிரிந்துபோக மனமே இல்லை. நான் வேறே இடத்துக்குப் போனாலும் எப்போதும் உங்கள் நினைவாகவேதான் இருப்பேன்’ என்றாளாம்.

அதைக்கேட்ட கிழவர் அதற்கு எவ்வித மறுமொழியும் சொல்லாமல் அப்போது பேசாமல் இருந்துவிட்டாராம். ஆனாலும், அந்த விஷயம் அவருடைய மனசில் அது முதல் பதிந்து போகவே, அவர் பல தினங்கள் வரையில் அதைப்பற்றி தீர்க்காலோசனை செய்தாராம். கடைசியில் எப்படியோ, கிழவருக்கும் கமலவல்லிக்கும் நிச்சயமாகிவிட்டது. காரியம் இவ்விதம் முடிவாகி இருக்கின்றதென்ற சங்கதி ஊராருக்குத் தெரிந்தால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அபிப் பிராயத்தை வெளியிடுவார்கள். ஆகையால், அதனால் கிழவருடைய எண்ணம் மாறினாலும் மாறலாமென்று நினைத்து, இதைக் கடைசிவரையில் வெளியிடாமல் வைத்திருந்து, நாள் வைத்து பந்தல் போட்டு, சகலமான முஸ்தீபுகளையும் செய்து கொண்டு நேற்றுதான் இவர்கள் இந்த விஷயத்தைப் பகிரங்கப் படுத்தினார்கள். இன்று காலையில் முகூர்த்தம் நிறைவேறியது. பிறகு பந்திபோஜனம் நடந்தது. இப்போது மேளக் கச்சேரி நடக்கிறது” என்றாள்.

அந்த வரலாற்றை நிரம்பவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டே இருந்த திவான் சாமியார், ‘ஒகோ! அப்படியா! சரிதான். நல்ல காரியம். தள்ளாத கிழவருக்கு இவர்களுடைய