பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 141

கண்களைத் திறக்க முயல்வதும் ஆடி ஆடிச் சுவரில் சாய்வதுமாய் இருந்தார்.

அதைக் கண்ட குஞ்சிதடாத முதலியார் மிகுந்த கவலையும் கலக்கமும் கொள்ளத் தொடங்கி தமது வலக்கரத்தை திவான் சாமியாரின் உடம்பின்மீது வைத்து அன்பாகவும் மிருதுவாகவும் தடவிக் கொடுத்தபடி, ‘சுவாமிகளே! சுவாமிகளே உடம்பு எப்படி இருக்கிறது? கொஞ்சநேரம் இப்படியே படுத்துக் கொள்ளுகிறீர்களா?’ என்று கூறி நிரம்பவும் கணிகரமாய் உபசரிக்க, இரண்டொரு நிமிஷ நேரத்தில் திவான் தமது கண்களைத் திறந்து கொண்டு மெதுவாக நிமிர்ந்து முன்போல உட்கார்ந்து கொண்டார்.

அவ்வாறு தெளிவடைந்து உட்கார்ந்துகொண்ட திவான் அப்போதும் கலங்கிய மனதும் குழம்பிய பார்வையுமாய்த் தோன்றி கனவு நிலைமையில் இருப்பவர் போலக் காணப்பட்டு நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பி மருள மருள விழித்துத் தமது தந்தை சந்தேகம் கொள்ளாதபடி அவரது முகத்தையும் உடம்பையும் பன்முறை ஏற இறங்கப் பார்த்து ஆராய்ச்சி செய்தார். கிழவரது பழைய அடையாளங்கள் அடியோடு மாறுபட்டுப் போயிருந்தன. ஆனாலும், அவர் தமது தந்தை யாகத்தான் இருக்க வேண்டுமென்று திவான் நிச்சயித்துக் கொண்டார். தமது தந்தை இறந்துபோய் விட்டாரென்றும், தாம் இனி இந்தப் பிறப்பில் அவரைக் காண இயலாதென்றும் நினைத்து முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்த நிலைமையில், தாம் சிறிதும் எதிர்பார்க்காத இடத்திலும், நிலைமையிலும் அவரை உயிருடன் கண்டது திவானுக்கு வெகுநேரம் வரையில் உண்மை யாகப் படாமல் கனவு போலவே தோன்றியது. அவ்வாறு மனிதர் தவறுதலாக மயானத்தில் கொளுத்தப்பட்டபின் இரண்டு வருஷ காலத்திற்குப் பிறகு அவர் உயிருடன் காணப்பட்டார் என்பது எப்பொழுதும் எவ்விடத்திலும் திவான் கேட்டிராத அதிசய சம்பவமாய் இருந்தது. ஆகையால், திவானினது மனத்தில் அது உண்மையென்று சுலபத்தில் உரைக்கவில்லை. அந்த அபூர்வச் செய்தியைக் கேட்டதனால் உண்டான பிரமிப்பும், ஆச்சரியமும் அவரைவிட்டு எளிதில் அகலாமல் இருந்தன. தமது தந்தை அவரது சம்சாரம், சம்பத்து முதலியவற்றையும் இழந்து,