பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 செளந்தர கோகிலம்

அத்தகைய கேவல நிலைமையை அடைந்துவிட்டாரே என்ற நினைவு தோன்றத் தோன்ற, அவரது மனம் சகிக்க வொண்ணாத பெருத்த விசனத்தையும் துடிப்பையும் அடைந்து பரிதவித்துப் பதறிப் பாகாய் இளகியோடியது. ஆனாலும், எப்படியாகிலும் அவர் உயிருடன் இருந்து இந்த ஜென்மத்தில் மறுபடி தமக்குக் காட்சி கொடுத்தாரே என்ற நினைவு இன்னொரு பக்கத்தில் எழுந்து அவரது மனதும் தேகமும் கட்டிலடங்காதபடி தளிர்த்து ஆநந்தவெறி கொண்டு பரவசமடையும்படிச் செய்தது. தாம் இறந்துபோய் விட்டதாகக் காட்டி வெளியிட்ட பொய்யான செய்தியைக் கேட்டதிலிருந்தே தமது தந்தை இடிந்து நிலை குலைந்து தளர்வடைந்து முடிவில் அகால மரணமடைந்து விட்டதாகவும், அத்தகைய பெருத்த பழிக்கும், பாவத்திற்கும் தாமே உத்தரவாதி யென்றும் திவான் அது வரையில் எண்ணி எண்ணி மனநைந்துருகி இரத்தக்கண்ணிர் விடுத்திருந்தவர் ஆதலால், அந்த அபாரமான பழி தமக்கு இல்லாமல் போய் விட்டது என்ற விஷயமே அப்பொழுது திவானின் துயரச் சுமையில் பெரும் பாகத்தையும் விலக்கியது. அவர் தெளிவடைந்த வுடனே, தாம் அவரது புத்திரரான திவான் என்ற செய்தியைத் தமது தந்தைக்குத் தெரிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டு மென்ற நினைவே அவரது மனத்தில் முதன் முதலில் துடியாக எழுந்து அவரைத் தூண்டியது. ஆயினும், அவர் உடனே தமது மனப் பதைப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டார். தமது தந்தை நோய் வாய்ப்பட்டு இளைத்துத் தளர்ந்து கேவலம் துர்ப்பலமான நிலைமையில் இருந்தமையால், அத்தகைய அபாரமான சந்தோஷச் செய்தியைத் தாங்க அவருக்கு வலுவிராதென்றும், அதனால் இவர் இறந்துபோனாலும் போய் விடுவாரென்றும் திவான் அஞ்சினார். அதுவுமின்றி, தாம் இன்னார் என்பதைத் தெரிவித் தால், தாம் அத்தகைய நிலைமையை அடைந்த வரலாற்றை ஆதியோடந்தமாய்க் கூற நேரும் என்ற நினைவும் உண்டாயிற்று. தாம் அவ்வாறு கூற நேரின், தமது சமையற்காரன் தமக்கு விஷமிட முயற்சித்தது, அவன் காந்திமதியைக் குறித்து விபரீதமான செய்திகளை வெளியிட்டது, அதன் பிறகு தாம் செய்த காரியங்கள் முதலிய எல்லா விவரங்களையும் சவிஸ்தாரமாக வெளியிட வேண்டியிருக்கும் ஆதலால், அத்தகைய துன்பகரமான