பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1... செளந்தர கோகிலம்

அதைக்கேட்ட திவான் தமது தந்தையிடம் பொய்யான சொற்களை உபயோகிக்க மாட்டாதவராய்ச் சிறிது நேரம் தயங்கித் தத்தளித்தார். ஆனாலும், அவரது நன்மையைக் கருதித் தாம் அப்பொழுது உண்மையை மறைத்துப் பேசியே தீரவேண்டுமென்று தமது மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு, “பெரியவரே இனி நான் உங்களை என்ன விதமான முறைமை சொல்லியழைப்பது என்பதையறியாமல் நான் தயங்குகிறேன். நான் ஏற்கெனவே உங்களைப் பல தடவைகளில் பார்த்திருக்கிறேன். உங்களுடைய யோக்கியதா பrத்தையும் நான் நன்றாக அறிவேன்” என்றார்.

குஞ்சிதயாத முதலியார் : அப்படியா! அதுவும் என் பாக்கியந்தான் என்னைக் கண்டு, “இவன் எப்பேர்ப்பட்ட இழிவான மனிதனோ” என்று சம்சயங் கொள்ளத் தக்க புதிய மனிதரைக் கொண்டு என்னைக் காப்பாற்றச் செய்யாமல், என்னுடைய பூர்வோத்தரங்களையெல்லாம் நன்றாக அறிந்தவ ரான தங்களைக் கொண்டு கடவுள் என்னைக் காப்பாற்றச் செய்தது அவருடைய அகண்டாகாரமான பேரருளைத்தான் காட்டுகிறது:

திவான் சாமியார் : அது மாத்திரமல்ல. நானும் தங்கள் குமாரரும் ஈருடலும் ஒருயிருமாயிருந்த ஆப்த சிநேகிதர்கள். வயசு வடிவம் குணம் மனப் போக்கு முதலிய சகலமான அம்சங்களிலும் நாங்கள் இருவரும் ஒருவர் போலவே இருந்தமையால், ஜனங்கள் எங்கள் இருவரையும் ஒரே வயிற்றிலிருந்து ஒரே காலத்தில் ஜனித்த இரட்டைப் பிள்ளைகளோவென்றுகூட எண்ணி விடுவார்கள். அவர்தான் நான், நான்தான் அவர் என்று சொல்லத் தக்கபடி நானும் அவரும் ஒன்றாய் ஐக்கியப்பட்டுப் போயிருந்தோம். எவரும் எதிர்பார்க்காத விதமாய் ஈசுவரன் அவரை இப்படிப்பட்ட சோதனைக்கு ஆளாக்கி விட்டார். அவர் மறைந்து போன பிறகு நான் சொந்த மனிதர்களையும் சகலமான சுகபோகங்களையும் குடும்ப வாழ்க்கையையும் துறந்து, ஊரையும், நாட்டையும் துறந்து, இப்படி சந்நியாசிக் கோலம் பூண்டு வடக்கே காஸ்மீரம், ஹரித்துவாரம் முதலிய புண்ணிய rேத்திரங்களுக்கெல்லாம் போய்விட்டு, இப்பொழுதுதான் வந்துகொண்டிருக்கிறேன் -