பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 147

அவர் கூறிய சொற்களை யெல்லாம் கேட்ட குஞ்சிதபாத முதலியார் அளவற்ற மகிழ்ச்சியும் ஆச்சரியமும் சகிக்க வொண்ணாத மனவெழுச்சியும் அடைந்து ஆனந்தக் கண்ணிர் விடுத்து, “ஆகா! இதுவும் எம்பிரான் திருவருளா! என்ன ஆச்சரியம் இது காற்று எவருடைய கண்ணிலும் படா விட்டாலும் எங்கும் நிறைந்திருந்து எல்லோருக்கும் ஜீவாதாரமாக அமைந்து ஒவ்வொருவரையும் காப்பாற்றுவது போலக் கடவுளும் எவருடைய கண்ணிலும் படாமல் எங்கும் நிறைந்து தோன்றாத் துணைவனாய் இருந்து ஒவ்வொருவரது தேவையையும் உணர்ந்து அவரவர்க்குத் தக்க உதவி செய்து எல்லோரையும் காப்பாற்றுகிறார் என்பதற்கு இதைவிட வேறு திருஷ்டாந்தமும் தேவையா! நான் இப்போது காண்பதெல்லாம் ஏதோ சொப்பனம் போல இருக்கிறதேயன்றி உண்மையென்ற நம்பிக்கையே என் மனம் கொள்ள மாட்டேன் என்கிறது. என்னப்பனே! மோகலிங்கம்! உன்னிஷ்டம் போலவே நீ எந்தக் காரியத்தையும் நடத்தலாம். நான் உன் விருப்பம் போல நடந்து கொள்ளத் தடையில்லை. என்னப்பனே! நீயும் என் குமாரனும் இவ்வளவு அன்னியோன்னியமாக இருந்ததாக நீ இப்போது சொல்லுகிறாயே! கொஞ்ச நேரத்துக்கு முன் நான் என் வரலாற்றையும் பெயரையும் வெளியிட்டபோது, “எங்கேயோ திவானாயிருப்பதாகச் சொன்னார்களே அவருடைய தகப்பனாரா’ என்று கேட்டாயே! நீ ஒன்றையும் அறியாதவனைப் போல அப்படிப் பேசிய காரணம் என்ன?’ என்றார்.

திவான் சாமியார், “அப்பா! உங்கள் குமாரர் அடைந்திருந்த மேம்பாடும் உன்னத நிலைமையும், யோக போக்கியங்களும் ஒரு நிமிஷத்தில் கனவுபோல இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அவர் உயிருடனிருந்தது எனக்கே சொப்பனம் போல ஆகிவிட்டது. ஆகையால் திடீரென்று நீங்கள் அவருடைய குடும்ப பிரஸ்தாபத்தை எடுத்தபடியால் என்னை மீறி என் வாய் எதையோ உளறி விட்டது. அவ்வளவே தவிர வேறொன்று மில்லை. அது ஒருபுறம் இருக்க, நாம் இனி எந்த ஊரில் இருக்கலாம் என்பதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் தெரிய வேண்டும். ஒரு கால், நீங்கள் முன்னிருந்த திருவிட மருதூருக்கே போயிருக்க இஷ்டப்படுகிறீர்களா அல்லது வேறு