பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 149

என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அநேகமாய் அது என்னுடைய இளைய சம்சாரத்தைப் பற்றிய விஷயமாகத்தான் இருக்கும் என்று நான் யூகிக்கிறேன். எதுவாக இருந்தாலும், இருக்கட்டும் கேட்கலாம்” என்றார்.

திவான் சாமியார், ‘அப்பா! நீங்கள் செய்தது சரியான யூகமே. இவ்வளவு உலக அநுபவமுடைய உங்களுக்குத் தெரியாத விஷயம் என்ன இருக்கிறது. நான் வேறு எதையும் கேட்க விரும்பவில்லை, நீங்கள் இரண்டாவது தாரம் கட்டிக் கொண்டீர்களே. அந்த அம்மாளும், அவர்களுடைய தகப்பனார் முதலிய பந்துக்களும் கடைசி வரையில் உங்களிடம் அந்தரங்க மான அன்போடு இருந்து வந்தார்களா? நீங்கள் மார்படைப்பினால் சுவாச பங்கமடைந்திருந்த காலத்தில் அவர்கள் உண்மையிலேயே நீங்கள் இறந்து போனதாக நம்பி உங்களைக் கொளுத்த முயற்சித்திருப்பார்களா? அல்லது, சுவாச பங்கமடைந்து படுத் திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தும், வேண்டுமென்று அப்படிப் பட்ட காரியம் செய்ய முயற்சித்திருப்பார்களா? அதற்குமுன் அவர்கள் உங்களிடம் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து உங்க ளுடைய மனசிற்கு அது எப்படிப் படுகிறது? நீங்கள் சுடுகாட்டி லிருந்து கொண்டு காத்தானை அனுப்பிய காலத்தில், அவனுக்கு அவர்கள் சொன்ன மறுமொழியைக் கொண்டே, அவர்கள் கெட்டவர்களென்றும் நாம் நிச்சயிப்பது சரியல்லவென்று நினைக்கிறேன். இறந்து போனவர்கள் ஊருக்குள் வந்தால், ஜனங்கள் அவரை அடித்துக் கொன்று விடுவார்களென்று மனப்பூர்வமாகப் பயந்தே அவர்கள் அப்படிச் சொல்லி இருப்பதும் சகஜமே. ஆகையால், அதை நாம் இப்பொழுது அவ்வளவாகப் பாராட்டுவது உசிதமல்ல. எனக்கு முக்கியமாகத் தெரிய வேண்டுவது என்னவென்றால், அவர்கள் உங்களிடம் உண்மையான மதிப்பும் மரியாதையும் வைத்து நல்ல மாதிரியாக நடந்துகொண்டு வந்தார்களா அல்லது எப்படியாவது நீங்கள் ஒழிந்து போவதே தங்களுக்கு அநுகூலமானது என்ற அபிப்பிராயத்துடன் இருந்தார்களா என்பதுதான் எனக்குத் தெளிவாகத் தெரியவேண்டும். ஏனென்றால், அவர்கள் இப் பொழுது அந்த ஊரில் இல்லை. ஆனாலும், வேறு எந்த ஊரிலாவது உயிரோடு இருப்பார்கள் என்பதைப் பற்றி