பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15O செளந்தர கோகிலம்

சந்தேகமே இல்லை. அவர்கள் நல்ல நடத்தை உடையவர்களாக வும், உங்களிடம் குரோத புத்தியில்லாதவர்களாகவும் இருந்தால், நீங்கள் மறுபடியும் அவர்களுடன் சேர்ந்து ஒன்றாயிருப்பதற்கு வேண்டிய பிரயத்தனங்களை நான் செய்யலாமென்று நினைக்கிறேன். ஆகையால் இந்த முக்கியமான விஷயத்தில் நீங்கள் உங்களுடைய மனப்பூர்வமான அபிப்பிராயத்தை வெளியிடக் கோருகிறேன்’ என்றார்.

குஞ்சிதபாத முதலியார் “அப்பா மோகலிங்கம் என் இளைய சம்சாரமும், அவளுடைய தகப்பனார் முதலியாரும் நான் பார்த்த வரையில் என்னிடம் அந்தரங்க விசுவாசம் உடையவர்களாகவும், எனக்கு இரண்டகம் நினைக்காதவர்களாக வுமே இருந்து வந்தார்கள் என்பது என் அபிப்பிராயம். ஆனால், காத்தானிடம் அவர்கள் பேசிய மாதிரிதான் எனக்கு இன்னமும் நம்பிக்கைப் படாததாக இருக்கிறது. நீ எண்ணுகிறபடி, ஊராருக்குப் பயந்து அவர்கள் அப்படி நடந்து கொண்டாலும் நடந்து கொண்டிருக்கலாம். வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் என் விஷயத்தில் குரோதபுத்தி கொண்டிருப்பதாக நான் உணரும்படி அவர்கள் நடந்து கொண்டதே இல்லை. ஆனால் இப்போது அவர்கள் என்ன நிதானத்தில் இருக்கிறார் களோ, அது யாருக்குத் தெரியும். அந்தப் பெண் என்னிடம் நடந்துகொண்ட மாதிரி, என்னை மீறி நான் அவளிடம் பிரியம் கொள்ளும்படியாக இருந்ததென்றே நான் சொல்ல வேண்டும். அவர்கள் காத்தானிடம் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து அந்தப் பிரியம் அடியோடு போய்விட்டதானாலும், அவர்கள் இப்போது எப்படிப்பட்ட நடத்தையோடு இருக்கிறார்கள் என்பதையும், அதற்குமுன் அவர்கள் என்னிடம் நடந்துகொண்டதெல்லாம் பொய் வேஷமா, உண்மையானது தானா என்பதையும் பார்க்க வேண்டுமென்ற ஒர் அவா தடுக்க முடியாமல் என் மனசில் உண்டாகிறது. என்னுடைய கேவலமான இந்த நிலைமையில் அந்த எண்ணமெல்லாம் கைகூடவா போகிறது? அப்படியே அவர்களை நான் மறுபடி காண்கிறதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் நல்ல நடத்தை உடையவர்களாக இருந்தாலும், அவர்கள் என்னைப் பழையபடி எஜமானனாய் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா அல்லது அவர்கள் கெட்ட நடத்தை