பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 151

உடையவர்களாக இருந்தால், அவர்களைத் தண்டிக்கத்தான் எனக்கு உரிமை இருக்கிறதா ஒன்றுமில்லை” என்றார்.

அதைக் கேட்ட திவான் சாமியார் சிறிது நேரம் யோசனை செய்தபின், “சரி; இருக்கட்டும். கடவுள் செயல் எப்படி இருக்கிறதோ பார்க்கலாம். நான் போய் ஒரு வண்டி அமர்த்திக் கொண்டு வருகிறேன். உடனே நாம் திருவையாற்றுக்குப் போய்ச் சேர்ந்து முதலில் அவ்விடத்தில் நம்முடைய குடித்தனத்தை ஸ்தாபித்துக் கொள்வோம்; அதன் பிறகு மற்ற விஷயங்களைக் கவனிப்போம்” என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு ஊருக்குள்போய் ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு வந்து தமது தந்தையை ஏற்றி அதற்குள் வைத்துக்கொண்டு திருவையாற்றிற்குப் போய்ச் சேர்ந்தார். போனவர் அந்த ஊரில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தரும சத்திரங்களுள் ஒன்றை அடைந்து, அதன் திண்ணையில் தமது தந்தையை உட்கார வைத்துவிட்டு தெருக்களுக்குள் நுழைந்து, விசாரித்துப் பார்த்து வசதியான ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி முன் பணம் கொடுத்து அதை ஏற்றுக் கொண்டு சத்திரத்திற்கு வந்து, தமது தந்தையை மறுபடி வண்டியில் வைத்து அழைத்துக்கொண்டு போய்த் தமது புதிய ஜாகையில் விடுத்தார். விடுத்தபின், அவருடைய குற்றேவல்களைச் செய்வதற்கு நான்கு வேலையாட்களையும், சமையல் வீட்டு வேலைகள் முதலியவற்றைச் செய்வதற்கு இரண்டு வேலைக்காரி களையும் ஆக அறுவரை உடனே நியமித்ததன்றி, அந்த ஊரிலிருந்த வைத்தியர்களுள் சிறந்தவராய் விளங்கிய ஒருவரைத் தருவித்துத் தமது தந்தையின் தேகக்கூறை உணரச்செய்து, அவரைத் தேற்றுவதற்கான சிறந்த ஒளஷதங்களைக் கொடுக்கும்படி திட்டம் செய்துவிட்டு, கிழவருக்குத் தேவையான கட்டில், மெத்தைகள், திண்டு தலையணைகள், நாற்காலிகள், ஸோபாக்கள், பாத்திரங்கள், சமையல் சாமான்கள், ஏராளமான உயர்ந்த வஸ்திரங்கள், சட்டைகள் முதலிய சகலமான பொருட்களையும் இரண்டு மூன்று தினங்களுக்குள் வரவழைத்து வீட்டில் நிரப்பி, அதை ஒரு பெருத்த ஜெமீந்தாரினது மாளிகை போல அலங் கரித்துவிட்டார். அவர் ஒவ்வொரு சாமானையும் அப்பொழுதுதான் புதிதாய் வாங்குகிறதாகக் காட்டிக் கொள்ளாமல், எவ்விடத்தி லோவுள்ள தமது சொந்த ஊரிலிருந்து அவைகள் வருவது