பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 157

திவான் சாமியார் : தாயே! சமீப காலத்தில் நான் இங்கே வந்துவிட்டுப் போனது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

ஸ்திரீ : ஒ! நன்றாக ஞாபகமிருக்கிறதே! நீங்கள் இப்போது தானே வந்துவிட்டுப் போனிர்கள். நேற்றுதான் வந்துவிட்டுப் போனதுபோல அல்லவா இருக்கிறது.

திவான் சாமியார் : அப்படியா இருக்கிறது! நான் இந்த ஊரை விட்டுப் போய் சரியாய் இருபது நாட்கள் ஆய்விட்டனவே! இதற்குள் நான் எத்தனையோ ஊர்களுக்குப் போய்விட்டல்லவா திரும்பி வந்திருக்கிறேன். அம்மணி! நான் முன்னே வந்திருந்து விட்டுப் போனபோது, இவ்வளவு சீக்கிரத்தில் நான் மறுபடி திரும்பி இந்த ஊருக்கு வருவேனென்று நினைக்கவே இல்லை. நான் போன இடத்தில் முக்கியமான ஒரு பொருள் எனக்குக் கிடைத்தது. அது எவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல. அதை அலட்சியமாக எவரிடத்திலாவது கொடுத்துவிடவும், மனம் இடங்கொடுக்கவில்லை. அது எனக்கு உபயோகப்படுவதாகவும் தோன்றவில்லை. அப்போது உங்களுடைய ஞாபகம் வந்தது. ஆகையால், உடனே புறப்பட்டு இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஸ்திரீ : (வியப்பும் ஆச்சரியமும் அடைந்து) என்ன சுவாமிகளே! நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சமும் விளங்கவே இல்லையே! நீங்கள் குறித்துப் பேசுவது ஒருவேளை இந்தச் சீமை இலந்தைப் பழமாயிருக்குமா? -

திவான் சாமியார் : இல்லை அம்மா! இல்லை. இந்த அற்பப் பழம் கிடைத்தால், அதைப் பற்றி நான் இவ்விதமான எண்ணமெல்லாம் கொள்வது நியாயமாகுமா? நான் குறிப்பது பழமல்ல. அது வேறொரு வஸ்து. இதோ தருகிறேன் பாருங்கள் - என்று கூறிய வண்ணம் தமது மூட்டைக்குள் தனியாக மேலே எடுத்து வைக்கப்பட்டிருந்த தமது தந்தையின் புகைப்படப் பிரதிகளுள் ஒன்றை உடனே எடுத்து, சிறிது தூரத்திற்கப்பால் வைத்து நகர்த்தி விட்டார். விஷயம் எதுவாக இருக்குமென்பதை சிறிதும் யூகிக்க மாட்டாதவளாய்ப் பலவிதமான சந்தேகங்கள் கொண்டு தவித்து ஆவலே வடிவாக நின்ற அந்த ஸ்திரி விரைவாகப் பாய்ந்து அந்தப் படத்தைத் தனது கையில் எடுத்துச் சரேலென்று பார்த்தவள். அடுத்த நிமிஷம், “சுவாமிகளே இது