பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செளந்தர கோகிலம்

எல்லாம் சொல்லிவிட்டுப் போவாள். இந்த விஷயங்களை எல்லாம் அந்த அம்மாள் சொல்லத்தான் நான் தெரிந்து கொண்டேன். இல்லாவிட்டால், வேறு எப்படித் தெரியப் போகிறது” என்றாள்.

திவான் சாமியார், “சரி கிழவர் தம்முடைய வித்தாப்பிய தசையில் துயரத்துக்கு ஆளாய் முற்றிலும் அநாதரவான நிலைமையில் இருக்கிறார். இவர் அவரையும் போஷித்துக் காப்பாற்றித் தாங்களும் rேமப்பட்டு நல்ல நிலைமையில் இருக்கவேண்டும். சரி; கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் எதற்காக? உலகைத் துறந்த பரதேசியான எனக்கு இந்த விசாரணையெல்லாம் எதற்கு? சாப்பிட்டவுடன் கொஞ்சம் அலுப்பாக இருந்தது. அதைப்பற்றி நான் கொஞ்சநேரம் திண்ணையில் உட்கார்ந்துகொண்டேன். நான் போய்விட்டு வருகிறேனம்மா’ என்று கூறியவண்ணம் தமது மூட்டையை யும் செம்பையும் தண்டத்தையும் எடுத்துக்கொண்டு அவ் விடத்தை விட்டுத் தெருவிற்குப் போய்க் கலியான வீட்டின் பக்கம் தமது முகத்தையும் திருப்பாமல் விரைவாக நடந்து அந்தத் தெருவைவிட்டு அப்பால் சென்று மாயூரத்திற்குப் போகும் ரஸ்தாவோடு பிரயாணப்பட்டுவிட்டார்.

அவரது மனத்தின் அப்போதைய நிலைமை இன்னவிதம் இருந்தது என்பதை வாசகர்கள் யூகித்துக்கொள்வதே எளிதன்றி, விவரித்து உரைப்பது சாத்தியமற்ற காரியமென்றே கூற வேண்டும். அந்த நிமிஷம் வரையில் தாம் பிரத்தியகூடி தெய்வமாக மதித்திருக்கும் தமது தந்தை ஒரு பெண்ணை மணந்து வைபவமாய்க் கலியாணம் நடத்துகையில் தாம் கூட இருந்து அந்த சந்தோஷத்தைத் தாமும் அடையக் கொடுத்து வைக்கவில்லையே என்ற பெருத்த விசனமும் மனக்கொதிப்பும் அவரது மனத்தில் முக்கியமாகப் பொங்கி எழத் தொடங்கின. அவர் கவியாணம் செய்துகொள்வதைப்பற்றி உண்மையில் அருவருப்பைக் கொண்டுள்ள ஊர் ஜனங்களின் வெளிப் பார்வைக்கு அதை மறந்து, அதைப்பற்றித் தாம் சந்தோஷப் படுவதாய்க் காட்டி, அந்தச் சடங்கை நடத்திவைத்து விருந்துண்டு மேளக் கச்சேரியைக் குதூகலமாய்க் கேட்டுக் கொண்டிருக்க, அதைப்பற்றி உண்மையிலேயே அபாரமான