பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 செளந்தர கோகிலம்

யாருடைய படம் நான் அடிக்கடி பார்த்து நிரம்பவும் பழகிய மனிதருடைய படமல்லவா இது இவர் யார் என்பது நெஞ்சில் இருக்கிறது; வாயில் வரமாட்டேன் என்கிறதே! ஆம்! ஆம்! இப்போது ஞாபகம் வந்துவிட்டது. இதோ எதிர்த்த வீட்டிலிருந்த ஜவுளிக்கார முதலியாருடைய படமல்லவா இது? இது உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? நீங்கள் இதற்கு முன் இரண்டு தடவை வந்த போதெல்லாம் இவரைப் பற்றியே பேசினீர்களே! கடைசி யாக இந்த ஊரை விட்டு எங்கேயோ போன இடத்தில்கூட இந்த மனிதருடைய படமே உங்களுக்குக் கிடைத்தது போலிருக்கிறதே! திவான் சாமியார் : ஆம். அம்மா! அவரவருடைய மனசில் உள்ள சிந்தனைப் படியேதான் காரியமும் கைகூடுமென்று நம்முடைய பெரியோர்கள் சொல்லக் கேட்டதில்லையா? அது நிஜமாகவே முடிந்தது. இது எனக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா? நான் இந்த ஊரிலிருந்து புறப்பட்டுப் போனபிறகு பல ஸ்தலங்களுக்கு யாத்திரை போய்க் கடைசியில் தஞ்சாவூருக்குப் போனேன். அங்கே நான் கடைத் தெருவின் வழியாய்ப் போன காலத்தில் ஒரு மனிதன் ரஸ்தாவோரத்தில் சுமார் நூறு படங் களைப் பரப்பி வைத்து அரைவிலை கால்விலை யென்று சொல்லி விற்றுக் கொண்டிருந்தான். அதில் தேவகணங்களைச் சேர்ந்த படங்கள் அநேகம் இருந்தன. மனிதர்களுடைய புகைப்படமும் ஏராளமாகக் கிடந்தன. ஜனங்கள் அந்தக் கடையைச் சுற்றிலும் கும்பலாக நின்று ஆளுக்கொன்றாய்ப் படங்களை எடுத்து வேடிக்கை பார்ப்பதும் விலைக்கு வாங்குவதுமாய் இருந்தனர். அப்போது ஒரு மனிதன் இந்தப் படத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, ‘இது பாருடைய படம் ஐயா? இதை யார் வாங்கப் போகிறார்களென்று இங்கே கொண்டு வந்து வைத்திருக்கி நீர்?’ என்று கேட்டான்.

அதற்கு அந்தப் படக்கடைக்காரன், “அடே போ ஐயா! இது ஒரு பெரிய மனிதருடைய படமல்லவா திருவனந்தபுரம் திவான் வேலை பார்த்த ஒருவருடைய தகப்பனாரின் படம் இது அந்த திவானைப் புலி தின்றுவிட்டது. அவரிடம் தஞ்சாவூரான் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அந்த வேலைக்காரனுக்கு இந்தப் படம் கிடைத்தது. இந்தப் படத்தை இவர்களுடைய சொந்தக்காரரிடம் கொடுத்தால், அவர்கள் நூறு இருநூறு