பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 163

நடந்து கொண்டு இல்லாத பொல்லாத அபவாதத்தையெல்லாம் தட்டிவிட்டிருக்க வேண்டுமென்று நான் அபிப்பிராயப் படுகிறேன். இதில் இன்னொரு முக்கியமான விஷயமிருக்கிறது. அந்தப் பெண் துன்மார்க்கமான நடத்தையில் இறங்கியிருக்கும் பட்சத்தில், அதற்கு உடந்தையாயிருந்த ஒரு மனிதனிடத்தி வள்வது அந்தப் பெண் தாங்கள் போகும் இடத்தை ரகஸியத்தில் தெரிவித்திருக்கும். அந்த மனிதனும் கூடப் போயிருப்பான். நீங்கள் சொல்லும் வரலாற்றை வைத்துக் கொண்டு பார்த்தால், அவர்களோடு இந்த ஊர் மனிதர் வேறு யாரும் போய்விட்ட தாகவும் தெரியவில்லை. இந்த ஊர் மனிதருள் ஒருவருக்காவது அவர்கள் இன்ன இடத்தில் இருக்கிறார்கள் என்பது ரகஸியத்தில் தெரிந்திருந்தாலும், அது எப்படியும் இதற்குள் பகிரங்கத்துக்கு வந்திருக்கும். இதுவரையில் விஷயம் ரகஸியமாகவே இருப்பதைப் பார்த்தால், அவர்கள் ஒருவரிடத்தில் கூட சொல்லாமல் போயிருக்க வேண்டுமென்பது நிச்சயமாகிறது. அதிலிருந்து, அவர்கள் இந்த ஊரிலுள்ள எந்த மனிதருடனும் துன்மார்க்கமான சம்பந்தமே வைத்துக் கொள்ளவில்லையென்பது உறுதியாகிறது. இந்த ஊரில் இருந்த வரையில் பெண் சுத்தமாகவே இருந்திருக்க வேண்டும். இந்த ஊரார் அவளைக் கெடுக்கவும் அவர்களிட மிருந்த சொத்தை அபகரிக்கவும் எண்ணியதைக் கண்டு பயந்தே அவர்கள் இந்த ஊரை விட்டுப் போய் விட்டார்கள் என்பதும் உறுதிப்படுகிறது. இருக்கட்டும்! நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். நானும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஊரூராய்த் திரியும் பரதேசியான நான் இதைத் துக்கிக் கொண்டு போவதைவிட இது உங்கள் வீட்டுச் சுவரிலேயே ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிருக்கட்டும். நான் மறுபடி யாத்திரை போகும் காலத்தில் எந்த ஊரிலாவது தற்செயலாக அவர்களைப் பற்றிய தகவல் ஏதேனும் கிடைக்குமானால், அவர்களைக் கண்டு உங்களிடம் வந்து படத்தை வாங்கிக்கொண்டு போகும்படிச் செய்கிறேன்” என்றார்.

அம்மாள் அதற்கு இசைந்தாள். அதற்குமேல் அவர்கள் இருவரும் வேறு பல வகைப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். தாம் அன்றைய தினம் அந்த ஊரில் தங்கி மறுநாள் புறப்பட்டுப் போக உத்தேசிப்பதாய் சாமியார்