பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 165

வயசாயிப் போச்சுங்ளே, தள்ளாமை வந்துடிச்சிங்க. அவனுக்கு விமன் அருச்சுனன் கணக்கா மலெ மலெயா மவனுங்க இருக்கிறானுங்க. அவுங்களும் கூடமாட ஒத்தாசெ பண்ணறா னுங்க, நீங்க இங்கிட்டே இருங்க. நானும் ஒரே ஒட்டமா ஒடி அவனெ அளெச்சாரேனுங்க” என்று கூறிய வண்ணம் அவ் விடத்தைவிட்டு, வீடுகளிருந்த இடத்தை நோக்கி ஒட்டமாக ஒடிப்போய்விட்டான். திவான் சாமியார் காத்தானுடன் தனிமையில் ரகசியமாகப் பேச விரும்பினார். ஆதலால் மாட்டுக் காரப் பையன்கள் கும்பலாக இருந்த இடத்தை விட்டு விலகிச் சிறிது தூரம் அப்பால் நடந்துபோய்த் தனியாகப் பிரிந்திருந்த ஒரு திடலில் நின்ற வண்ணம் காத்தானினது வருகையை ஆவலோடு எதிர்பார்த்து நின்றார்.

சிறிது நேரத்தில் தடியும் கையுமாகக் காத்தான் அவ்விடத் திற்கு வந்து சேர்ந்தான். அவனை அழைத்து வரச் சென்ற மாட்டுக் காரப் பையன் மறுபடி விளையாட்டுக் கும்பலில் போய்ச் சேர்ந்து கொண்டான். யாரோ ஒரு சாமியார் தன்னை எதன் பொருட்டு அழைக்கிறார் என்ற ஐயங்கொண்டு, பலவிதமாக எண்ணமிட்டுத் தயங்கித் தயங்கிச் சாமியாரண்டை போய்த் துர விலகி நின்ற காத்தான், ‘சாமியாரய்யா கும்பிட்றேனுங்க” என்று நிரம்பவும் வணக்கமாகக் குனிந்து அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நிமிர்ந்து நின்று அவரது முகத்தை உற்று நோக்கி, அதற்கு முன் அவர் தமக்குப் பழக்கமானவரா என்று அறிய முயற்சித்தான். உடனே திவான் சாமியார் தமது வலக் கரத்தை மார்பு வரையில் உயர்த்தி அவனை ஆசீர்வதித்துவிட்டு அவனை நோக்கி, “உன் பெயர் காத்தானா?” என்று நிரம்பவும் பிரியமாக வினவினார்.

காத்தான் : (பணிவாக) ஆமாஞ்சாe! நாந்தான் காத்தான். சாமியாரையாவோடே அடெயாளம் எனக்குத் தெரியலியே! நீங்க யாருங்க சாமீ?

திவான் சாமியார் : அப்பா காத்தான்! என்னை நீ இதற்கு முன் பார்த்திருக்கமாட்டாய். நானும் உன்னைப் பார்த்ததில்லை. வேறு விசேஷம் ஒன்றுமில்லை. உன்னிடம் கோரோசனை நல்ல திணிசாக அகப்படுமென்று கேள்வியுற்றிருக்கிறேன். எனக்கு