பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 167

வழியில் பறித்துக்கொண்டு வந்திருந்த சித்தாமணக்குக் தொட்டை இலைகளில் இரண்டைத் தரையில் பரப்பி, அதன்மீது, நான்கு பாகமாக இருந்த கோரோசனையை வைத்துவிட்டு முன்போல விலகி நின்றவனாய் திவான் சாமியாரை நோக்கி, “சாமீ! எடுத்து என்னமா இருக்குதுன்னு பாருங்க” என்றான். திவான் சாமியார் அதை எடுத்துப் பார்த்துவிட்டு, “சரி, நன்றாகத்தான் இருக்கிறது. இவைகளுக்கு மொத்த விலை ரூபாய் பதின்ான்கு ஆகிறது. நீ நல்ல யோக்கியமான மனிதனென்றும், சொற்ப விலை வாங்கிக் கொண்டு உயர்ந்த சரக்கையே கொடுப்பாயென்றும் என் சிநேகிதர் பல தடவைகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த ஞாபகத்தை வைத்துக் கொண்டுதான், நான் உன்னைத் தேடிக்கொண்டு வெகு தூரத்திலிருந்து, இந்த ஊருக்கு வந்தேன். நீ இப்போது என்னிடம் நடந்து கொண்டதைப் பார்க்க, உன்னைப் பற்றி அவர் என்னிடம், சொன்ன புகழ்ச்சியான வார்த்தையெல்லாம் உண்மையென்றே படுகிறது. நிரம்பவும் சந்தோஷமாயிற்று. என் கையில் நோட்டாக இருக்கிறது. பணமாக இல்லை. நோட்டை நான் ஊருக்குள் போய் மாற்றிக் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. இதோ இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் தருகிறேன். இருபது ரூபாயையும் நீயே எடுத்துக்கொள். ஒவ்வொரு மாட்டின் கோரோசனைக்கும் நீ ஒரு வராகனல்லவா விலை சொன்னாய். நான் கொடுத்தது ஐந்து ரூபாய் வீதம் ஆகிறது. எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வீட்டுக்குப்போ'என்று கூறிய வண்ணம் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அவனுக்கெதிரில் விசிறி எறிந்தார். அதைச் சிறிதும் எதிர்பார்க்காத கிழவன் அடக்கவொண்ணாத பெருங் களிப்பும் பூரிப்பும் நன்றியறிதலின் பெருக்குமடைந்து அவரை நோக்கி, ‘சாமீ! எசமானே! நீங்க மவராசா ஆயிரங்காலம் சொகமா இருக்கணும். இந்த மாதிரி இம்பிட்டு தாராளமா இந்தக் காலத்துலெ யாரு பணம் குடுக்கப் போறாங்க சாமீ! வாறவங்கள்ளாம் காரூவாயிக்கிக் குடுக்கிறியா, அரை ரூவா யிக்கிக் குடுக்கிறியான்னு நச்சு நச்சுன்னு பேசிப் பேசி என்னோடே உசிரெ வாங்கிப்புட்றாங்க. சாமி! நீங்க தரும தொரெதானுங்க. ஒங்க காலுக்கு கும்பிட்ரேனுங்க” என்று கூறி அவருக்குப்