பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 171

மேலே உசிரோடே இருக்காரோ, இல்லாமெப் போனா எறந்துதான் போயிட்டாரோ! அது ஆண்டவனுக்குத்தான் தெரியணும். அவுங்களே அந்தக் கோலத்துக்கு ஆளாக்கின மணிசரு போன எடந் தெரியாமே சணநேரத்துலெ அளிஞ்சு நாசமாய்ப் போயிட்டாங்க. அக்கரமம் நீடிச்சு நிக்காது சாமீ. ஆண்டவன் ஒடனே கைமேலே கூலி குடுத்துட்டான். அவுங்களெப்பத்தி எனக்கு அக்கெர இல்லிங்க. அந்த தர்ம ராசாவை இந்தக் கட்டைப் பட்டுப் போயிச் சாயறத்துக்குள்ளற, ஒரு தரமாச்சும் கண்ணாரப் பார்த்தாத்தான் என் மனசு குளிரும். அவுங்க இந்த ஊருக்கே வரமாட்டாங்களோ என்னமோ. நானு இந்த ஊரெ வுட்டும் எங்கிட்டும் போறதில்லெ. எப்படித்தான் இந்த ஆசெ திருமோ என்னமோ தெரியலிங்க. அந்தக் காலத்துலெ நந்தனாரு செதம் பரத்துக்குப் போயி சாமி கும்பிட ஆசெப்பட்ட மாதிரி நானும் ஆசெப்பட்டுப்பட்டு அப்படியே ஒஞ்சுபோயிக் கெடக்கறேனுங்க. எனக்கு ஆண்டவன்தான் தொணை செய்யணும்’ என்று நிர்ம்ப வும் மனநைவாகவும் உருக்கமாகவும் கூறினான்.

திவான் அப்பொழுதே அந்த வரலாற்றை முதன் முதலில் கேட்டவரைப்போல அளவற்ற வியப்பும் பிரமிப்பும் காட்டி, “ஆகா! அப்படியா நடந்தது! அதுவும் நல்லதுதான். மனிதர் உண்மையில் இறந்துபோவதும், அவர்களைக் சுட்டுக் கொளுத்தி சாம்பலாக்குவதும் சாதாரணமாக நடக்கக்கூடிய சம்பவம். இந்தப் பெரியவருடைய காரியம் அப்படி நடவாமல் மாறுபட்டுப் போனதில் முக்கியமான ஒரு விசேஷம் இருக்கிறது. அவர் உண்மையில் இறந்து போயிருந்தாலும் அவருடைய சொத்து சுதந்தரங்களையெல்லாம் பிறர்தானே எடுத்துக்கொண்டு போய் விடப் போகிறார்கள். ஆகையால், அவைகளைப் பற்றி நாம் இப்போது கவலையாவது விசனமாவது கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. முக்கியமாக இறந்து போனவருடைய உயிர் மீண்டதே! அப்பேர்பட்ட பாக்கியம் இந்த உலகத்தில் வேறு யாருக்காவது கிடைக்குமா? அவருடைய உயிர் மீண்டதே - அதுதான் ஒரு கோடி திரவியத்தைக் காட்டிலும் மேலான செல்வம். காத்தான்! நீ விசனப்படாதே நான் ஊரூராய் யாத்திரை செய்யும் பரதேசி. பெரியவர் எங்கே இருந்தாலும் நான் தேடிப் பார்த்து கூடிய சீக்கிரம் எப்படியாவது அவரைக் கண்டுபிடித்து இந்த