பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 செளந்தர கோகிலம்

அவருக்கு நல்ல மாதுரியமான போஜனம் செய்வித்தாள். அவளது பெருத்த அன்பைக் கண்டு களிகொண்ட திவான் சாமியார் தமது நன்றியறிதலின் பெருக்கை வெகுவாக வெளியிட்டு அவளை ஸ்தோத்திரம் செய்தவராய் மறுபடி வெளியில் வந்து திண்ணையில் படுத்து அந்த இரவைப் போக்கினார்.

அவர் திருவையாற்றிலிருந்து அந்த ஊருக்கு வந்தது முக்கியமாக இரண்டு மூன்று விஷயங்களை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடனேயே. தமது தந்தை அவரது மரணத்தைப்பற்றிக் கூறிய வரலாற்றை மெய்ப்பிக்கத் தகுந்தவன் காத்தான் ஒருவனே யாதலால், அவன் உயிருடன் இருக்கிறானா வென்பதையும், அவன் அந்த வரலாற்றைத் துணிவாக வெளியிடுவானோ வென்பதையும் நிச்சயித்துக் கொள்ள வேண்டுமென்பது அவரது முக்கியமான நோக்கம். தமது தந்தையின் இளைய மனைவி அந்த ஊரிலிருந்த வரையில் நல்ல நடத்தையுள்ளவளாயிருந்தாளா என்பது, அவளும், அவளது தகப்பன் முதலியோரும் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பது முதலிய விஷயங்களையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டு மென்டதும் அவரது நோக்கம். அதுவுமன்றி, தமது தந்தையின் அடையாளத்தை அந்த ஊர் ஜனங்கள் மறந்து போயிருப்பார்கள். ஆதலால், ஒருகால் தமது தந்தையின் தோற்றத்தில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டிருந்தால், அவரை மறுபடி காணும் ஜனங்கள் அவரது அடையாளத்தைக் கண்டுகொள்வது கடினமாக இருக்கு மென்ற எண்ணத்துடன், அவர் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியே புகைப்படம் எடுத்து, அதைத் தந்திரமாகப் பல முக்கியஸ்தர்களிடம் கொடுத்து, குஞ்சிதபாத முதலியார் இறந்து போனதற்கு முன் அப்படித்தான் இருந்தார் என்று அவர்களெல் லோரும் எண்ணிக் கொண்டிருக்கவும், தமது தந்தையை அவர்கள் மறுபடி கண்டால், அவர்தான் குஞ்சிதடாத முதலியா ரென்று உடனே அடையாளங்கண்டுகொள்ளவும் வேண்டு மென்ற கருத்துடன், அவர் படங்களில் பல பிரதிகள் தயாரித்துக் கொணர்ந்திருந்தார். அதுவுமன்றி, தமது தந்தையின் பேரில் இருந்த நிலங்களையும், வீடுகளையும் விலைக்கு வாங்கி அனுபவிப்பவர்கள் இன்னின்னார் என்ற தகவல்களையும் தாம் தெரிந்து கொண்டு போக வேண்டுமென்பதும் அவரது கருத்து.