பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 175

ஆகவே, அவர் அன்றிரவு முழுதும் அந்தத் திண்ணையில் படுத்திருந்து விடியற்காலையில் எழுந்து தமது ஸ்நானம் நியம நிஷ்டைகள் சுவாமி தரிசனம் முதலியவற்றை முடித்துக்கொண்டு அந்த ஊரிலிருந்த மிராசுதார்களும், தமது தந்தையின் நண்பர் களுமான ஏழுெட்டு மனிதர்களிடம் ஒருவர் பின் ஒருவராகவும், ஒருவருக்குத் தெரியாமல் மற்றவரிடமும் போய்த் தந்திரமாக சம்பாவித்திருந்துவிட்டு, ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு புகைப்படம் கொடுத்துவிட்டு அவரவர்களிடம் மேலே குறிக்கப் பட்ட தகவல்களில் எதெதைக் கிரகிக்க இயன்றதோ அதைக் கிரகித்துக் கொண்டு, அன்றைய தினம் முழுதும் அவ்வூரில் தங்கி யிருந்துவிட்டு, மறுநாள் காலையில் அதைவிட்டுப் பிரயாணமாகி அன்றைய தினம் பகலில் திருவையாற்றை அடைந்து தமது ஜாகைக்குப் போய்ச் சேர்ந்து, தாம் திருவடமருதூருக்குப் போய் விசாரித்து வந்த தகவல்களையெல்லாம் தமது தந்தையிடம் வெளியிட்டதன்றி அவரது பெயரால் தயாரித்து சென்னை கவர்னருக்கு அனுப்பும் பொருட்டு அன்றைய தினமே ஒரு மனு தயார் செய்தார். அதில் குஞ்சிதபாத முதலியார் திருவட மருதூரிலிருந்தது, அவரது குமாரரான திவான் திருவனந்தபுரத்தி லிருந்து, தமது மனைவியையும் புதல்வனையும் அனுப்பியது, அவர்கள் காணாமல் போனது, பிறகு அவர் புவியினால் கொல்லப்பட்டுப் போனதாக கிழவருக்கு செய்தி வந்தது, அவர் திருவனந்தபுரம் போய் அவ்விடத்திலிருந்த சொத்துக்களை யெல்லாம் எடுத்துவந்தது, பிறகு அவர் இராமலிங்கத்தின் குமாரத்தியை மணந்தது, சில வருஷ காலத்திற்குப் பிறகு மார்படைப்பினால் அவருக்கு ஏற்பட்ட அவகேடு, அவர் இறந்து போய் விட்டதாக அவரது சொந்தக்காரர்கள் எண்ணி அவரை மயானத்திற்குக் கொண்டு போய்க் கொளுத்தியது, அதன்பிறகு அவ்விடத்தில் அவர் பிழைத்துக் கொண்டு எழுந்தது, காத்தான் அவரது வீட்டிற்குப் போய் வந்த விவரம் முதலிய வரலாறு யாவற்றையும் தெளிவாகவும், விரிவாகவும் திவான் அந்த மனுவில் எழுதி, மேலும் அடியில் வரும் குறிப்புகளையும் எழுதினார்:

“நீதிபதியவர்களே! இச் சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினமே நான் மயானத்திலிருந்து திரும்பி என் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியதே நான் செய்யத்தக்க காரியமென்று என்