பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 செளந்தர கோகிலம்

மனசிற்கு இப்போதுதான் படுகிறது. இந்த விஷயத்தில் சட்டம், தர்ம சாஸ்திரம், உலக அநுஷ்டானம் முதலியவை எவ்விதமாக முறையிடுகின்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்பதை நான் அப்பொழுது உணராமல், நான் ஊருக்குள் போனால் உண்மையில் ஊரார் என்னை அடித்துக் கொன்று விடுவார்களோ என்ற அச்சம் ஒன்றையே கொண்டு, நான் ஊருக்குள் போகாமல், வேறு பல இடங்களுக்குப் போய் இந்த இடைக்காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது விவகாரங்களை நன்றாக அறிந்த நிபுணர்களிடம் விசாரித்துப் பார்த்ததில் நான் அப்படிச் செய்தது தவறு என்றும், என்னுடைய உரிமைகளை நான் இப்போதும் அடைய எனக்குப் பாத்தியமிருக்கிறதென்றும், ஊர் ஜனங்கள் எனக்கு எவ்விதமான தீங்கும் செய்வதற்கு சட்டம் இடங் கொடுக்கவில்லை என்றும் அவர்கள் அபிப்ராயம் கொடுக்கிறார்கள். ஆகையால் நான் தங்களுக்கு இந்த மனுவை எழுதியனுப்பிக் கொண்டிருக்கிறேன்.”

“மயானமென்பது உயிரற்ற பினங்களைக் கொளுத்துவதற் காக ஏற்பட்ட இடமேயன்றி உயிருடனிருக்கும் மனிதர்களைக் கொளுத்துவதற்காக ஏற்பட்ட இடமல்ல. தீயினாலோ, தண்ணி ரினாலோ, வீடு இடிந்து விழுவதனாலோ, ரயில் மோதிக் கொள்ளுவதாலோ, மார்படைப்பினாலோ, தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதனாலோ, இன்னும் இவை போன்ற காரணங்களினாலோ மனிதர் தமது பிரக்ஞையை இழந்து இறந்தவர் போலக் கிடந்தால், மற்றவர் தம்மாலேன்ற சிகிச்சை களைச் செய்து, வைத்தியர்களைத் தருவிக்க வேண்டுமாயின் தருவித்து, அந்த மனிதர் இறந்து போகாதபடி தடுத்து அவரது உயிரை மீட்டு, அவர் தெளிவடையும்படிச் செய்ய வேண்டுமென் பதே சட்டத்திற்கும் நீதிக்கும் அநுபவத்திற்கும் ஒத்த விஷயம். அப்படி மூர்ச்சித்துக் கிடந்தவரை இறந்து போய்விட்டதாக எண்ணுவதும், சவங்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை அவருக்குச் செய்வதும், அவரை மயானத்திற்குக் கொண்டு போவதும் தவறுதலாய் நிறைவேறிப் போகுமானால், அது மற்றவர்களின் தவறேயன்றி, மூர்ச்சித்துக் கிடப்பவரின் தவறாகாது. சவங்களுக்குச் செய்யப்பட வேண்டிய சடங்குகளைத் தாம் தவறுதலாக உயிருடனிருப்பவருக்குச் செய்துவிட்டமை