பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 177

யால், தாம் அவருடைய உயிரை எப்படியாவது போக்கிவிட வேண்டுமென்று எண்ணுவது நியாயமாகாது. அப்படிச் செய்வதற் கும், வேண்டுமென்றே கொலைக்குற்றம் செய்வதற்கும் சிறிதும் வித்தியாசம் கிடையாது. பிணங்களுக்குச் செய்யப்பட வேண்டிய சடங்குகள் உயிருடன் இருப்பவருக்குச் செய்யப்பட்டால், அந்தச் சடங்குகளே ரத்தாகிப் போய்விட்டன வென்று கருத வேண்டுமன்றி, மனிதருடைய உயிரை ரத்து செய்ய எத்தனிப்பது சட்டத்திற்கும் நீதிக்கும், பகுத்தறிவிற்கும் ஒவ்வாத மூடக் காரியம். சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட பிறகு மனிதர் பிழைத்து வந்துவிட்டால், அவர்களுக்குத் தம்முடைய சொத்து சுதந்திரங்களெல்லாம் இல்லாமல் போய் விடும் என்றாவது, அவர்கள் மறுபடி ஊருக்குள் வரக்கூடாது என்றாவது, தம்முடைய குடும்பத்து மனிதர்களையெல்லாம் அவர் துறந்துவிட வேண்டும் என்றாவது சட்டமாவது, சாஸ்திரமாவது சொல்வதாகத் தெரிய வில்லை. ஏதோ சில பட்டிக்காடுகளிலுள்ள மூட ஜனங்கள் அறியாமையினால் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளைச் சொல்லிக் கொண்டிருப்பதையே இதற்கு முக்கிய ஆதாரமாக வைத்துக் கொண்டு, ஒரு மனிதருடைய வாழ்நாளையே அடியோடு நாசமாக்கி, அவருடைய குடும்ப வாழ்க்கை சொத்து சுதந்திரங்கள் முதலியவைகளை அவர் அநுபவிக்காமல் செய்து, அவரைக் கேவலம் பிச்சைக்காரர் ஆக்குவதற்கு இந்தக் காருண்ய துரைத் தனத்தார் இடங்கொடுக்கக்கூடாதென்னும் விஷயத்தை நான் நிரம்பவும் வணக்கமாக விக்ஞாபித்துக் கொள்ளுகிறேன்.”

‘நான்தான் உண்மையில் அந்த குஞ்சிதபாத முதலியாரா என்பதையும் தாங்கள் வெகு சுலபத்தில் நிச்சயப்படுத்திவிடலாம். திருவடமருதூரில் வசிக்கும் காத்தானுக்கும், மற்றுமுள்ள பிரபல மிராசுதார்களுக்கும் என்னைக் காட்டினால், அவர்கள் என்னு டைய அடையாளத்தை உடனே கண்டு கொள்வார்கள்; அதுவு மன்றி இன்னொரு முக்கியமான சாட்சியமும் இருக்கிறது. நான் திருவருடமருதூருக்கு சம்பந்தப்பட்ட சப்ரிஜிஸ்டிரார் கச்சேரியில் பல தேதிகளில் பத்திரங்கள் பதிவு செய்திருக்கிறேன். அந்தச் சமயங் களில் எடுக்கப்பட்ட என் கைரேகை அடையாளங்கள் அந்தக் கச்சேரியில் உள்ள புஸ்தகங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது என்னுடைய கைரேகை அடையாளங்களை யாரைக்

செ.கோ.1:1-12